சுவிட்சர்லாந்தில் குளிர்காலத்தில் வீடற்றவர்கள் அனுபவிக்க இருக்கும் பிரச்சினை
இந்த குளிர்காலத்தில், சுவிஸ் மாகாணமொன்றில் வாழும் வீடற்றவர்கள் கூடுதலாக ஒரு கஷ்டத்தை அனுபவிக்க இருக்கிறார்கள்.
வீடற்றோர் சந்திக்க இருக்கும் கஷ்டம்
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதி ஒன்று, இந்த குளிர்காலத்தில் வீடற்றவர்களுக்கு கூடுதல் கஷ்டத்தைக் கொடுக்க உள்ளது.

ஆம், இனி, குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வீடற்றோருக்கு மட்டுமே அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்க அனுமதி அளிக்கப்படும்.
முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் முகாம்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆனால், இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கப்போகிறது என்கின்றன தொண்டு நிறுவனங்கள். காரணம், சுவிட்சர்லாந்தில் வாழும் வீடற்றோரில் 61 சதவிகிதம் பேர் முறையான அனுமதி பெற்றவர்கள் அல்ல.

ஆக, நாங்கள் புலம்பெயர்தல் சோதனை எல்லாம் செய்துகொண்டிருப்பதில்லை. யாருக்காவது அவசர உதவி தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவுவோம், அவ்வளவுதான் என்கிறார் The Salvation Army என்னும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த David Hunziker.
ஆக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விதியால், ஏற்கனவே வீடில்லாமல் கஷ்டப்படுவோர், இந்த குளிர்காலத்தில் அவர்களுக்கு முகாம்களிலும் இடம் கிடைக்காது என்பதால் கூடுதல் கஷ்டத்தை அனுபவிக்க இருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |