சுவிஸில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ரப்பர் தோட்டாக்களால் சுட்ட பொலிஸார்! வெளிவரும் பரபரப்பு வீடியோ
சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ரப்பர் தோட்டாக்களால் சுட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பொலிஸார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பெர்ன் நகரில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் முக்கிய ரயில் நிலையமான Bahnhof-ல் இருந்து Bundesgasse வரை போராட்டத்தின் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டகாரர்கள் மீண்டும் மீண்டும் பொலிஸ் தடைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதால், அவர்களை கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் ரப்பர் தோட்டக்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த போராட்டத்தின் போது 9 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
According to local police, water cannons and rubber bullets were employed due to protesters repeatedly disregarding police barriers.
— ? Sarwar ? (@ferozwala) October 8, 2021
#Bern #Switzerland #QRCode #VaccinatiePassport #Protest pic.twitter.com/3IarKDDgVu
பெர்னில் உள்ள பொலிசார், போராடத்தில் ஈடுபட்டவர்களை சாலையில் போட்டு சரமாரியாக தாக்கி கைது செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.