சுவிற்சர்லாந்தில் பேர்ண் வள்ளுவன் பள்ளியின் தமிழ்ப்புத்தாண்டு விழா !
சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டினை, 2054 ஆம் திருவள்ளுவராண்டுப்பிறப்பினைக் கொண்டாடியது.
பேர்ண் நகரமுதல்வர் திரு Alec von Graffenried முதன்மை விருந்தினராகப் பங்கேற்று விழாவினைத்தொடக்கிவைத்தார்.
தமிழ்நாட்லிருந்து வருகைதந்த சிறப்பு விருந்தினர் திரு.வ.மு.சே.திருவள்ளுவர் அவர்கள் தலைமைதாங்கினார்.
முற்பகல் 11.30 மணிக்கு மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள்,மாணவர்கள் விருந்தினர்களுக்கு பள்ளி அடையாளக்குறி கொடுத்து வரவேற்று, சிறப்பு விருந்தினர் திரு .வ.மு.சே.திருவள்ளுவர் மண்டபவாயிலில் மங்கலவிளக்கேற்றி வரவேற்பு நிகழ்வினைத் தொடக்கிவைக்க பெற்றோர்கள் மாணவர்கள் எழுந்து நின்று வரவேற்க நடிகமணி வைரமுத்து அரங்கிற்கு அழைத்துவரப்பட்டார்.
பல்லக்கில் இருந்த திருவள்ளுவரை வழிபட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த மதிய உணவு விருந்தோம்பலில் மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து விருந்துண்டு மகிழ்ந்தார்கள்.
12.15 மணிக்கு மதிய உணவு பரிமாறி விருந்தோம்பல் இடம்பெற்றது.13.45 மணிக்கு ;மங்கல விளக்கேற்றல், அகவணக்கம்,திருவள்ளுவர் பவனி,பாரம்பரிய தமிழிசைகள் இசைத்தல்.
மாணவர்களின் திருக்குறள் ஓதுல், ஆசிரியைகள் பள்ளிப்பண் இசைத் தல் வரவேற்புரை இருமொழிகளிலும் வரவேற்பு நடனம், விருந்தினருக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகள் எனத்தொடக்கநிகழ்வுகள் மிகவும் சிறப்பாகநடைபெற்றது.
முதன்மை விருந்தினர் திரு.Alec von Graffenried அவர்களும்,சிறப்பு விருந்தினர் திரு.வ.மு.சே.திருவள்ளுவர் அவர்களும்,பள்ளி முதல்வர் திரு.பொ.முருகவேள் அவர்களும் இணையர்நந்தினி அவர்களும் சுவிசுநாட்டு பள்ளி ஆசிரியர்களும், சுவிசுநாட்டு அதிகாரிகளும் மங்கலவிளக்கேற்றும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மாணவர்களின் பாடல், ஆடல்நிகழ்வுகள் இடையே பேச்சுக்கள், திருக்குறள் ஓதல் முதன்மைவிருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரை, பள்ளி முதல்வர் உரை, மாணவர்களின் தமிழ் இசைப்பாடல்கள் இடம்பெற்றது, இரவு உணவு பரிமாறி விருந்தோம்பலும் இடம்பெற்றது.
நந்தினி ஆசிரியையின் சிறப்புரை என்பவற்றுடன் மாணவமாணவிகளின் கிராமிய நடனங்கள், தப்புநடனம், திரையிசை நடனங்கள், சிறுவர்களின் வேடம்;தாங்கல் நிகழ்வு சிறப்பு நடனங்களாக Dream Creation Dance Crew குழுவினரின் நடனமும்,இத்தாலி நாட்டிலிருந்து வருகை தந்த சந்திரமோகன் செங்கவினின் நடனமும் இடம்பெற்றன.
மாணவர்களின் உரைகளும் இடம்பெற்றது பெரியமாணவர்களின் கல்வி நிகழ்ச்சி இடம்பெற்றது, குரங்கா மனிதனா நாடகம் என்பவற்றுடன் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
முதன்மை விருந்தினர் உரையில் உங்களுடைய நிறநிறமான உடைகள்,பார்ப்பதற்கு உங்கள் நாட்டிலிருப்பது போன்ற உணர்வைத்தருகின்றது! பெற்றோர்கள் பிள்ளைகள் மிகவும் விடுதலையாக(சுதந்திரம்) இயங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
தன்னை அழைத்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன் என்று நிறைவு செய்தார்.
சிறப்புவிருந்தினர் தமது உரையில் வழிபடும்போது ஒரு திருக்குறளினையும் இணைத்து ஓதிவழிபட்டு அதன்படி வாழப்பழகினாலே உங்கள் வாழ்வு மகிழ்வுடைய தாக மலரும் என்பதை எடுத்துரைத்தார் .
பெண்கள் நீங்கள் தலைகளில் மலர்கள் கட்டி,பிள்ளைகளும் வண்ணவண்ணச்சட்டைகள் அணிந்துமண்டபமே அழகாக இருக்கின்றது. திருவள்ளுவரை இவ்வாறு பல்லக்கில் சுமந்தீர்களே அது மிகப்பெரும் சிறப்பு என்றுபாராட்டியதோடு, மாணவர்களின் பாடல்கள்,பேச்சுக்கள்,நடனங்கள் மிகவும் சிறப்பாகவுள்ளது என்பாராட்டியதோடு கவியரங்கம் செய்த மாணவர்களைப்பாராட்டி கவிநூல்கள் வழங்கி மதிப்பளித்தார்.
இக்கவிகளை அனுப்பிவையுங்கள் தமிழ்ப்பணி இதழில் வெளியிடுவேன் என்றும் மாணவர்களை ஊக்குவித்தார்.
தமிழ்ப்பணி மாதஇதழின் பொன்விழாவை முன்னிட்டு 200 தமிழ்மொழித் தொண் டாளர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகள் வழங்கியதாகவும் அந்தவகையில் தமிழ் வழிபாடு நிகழ்த்தும் திரு.தர்மலிங்கம் சசிகுமார் ஐயா அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுவழங்கி மதிப்பளித்தார்.
பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் திரு. பொன்னம் பலம் முருகவேள் அவர்குளுக்கும்,ஆசிரியை நந்தினி முருகவேள் இணையர் அவவர் களுக்கும் தமிழ்ச் செம்மல் விருது வழங்கி சிறப்புச்செய்தார்.
அவ்வாறே இணையர் சந்திரதாசு தர்சினி அவர்களுக்கும், திரு.மகேசன் மனோகரன் அவர்களுக்கும், ஆசிரியை சாந்தா மனோகரன் இணையர் அவர்களுக்கும் தமிழ்ச்செம்மல்விருது வழங்கப்பட்டது. பானுரேகா வினோபாயி இணையர் அவர்களுக்கும்; மற்றும் ஆசிரியை இரவிக்கா நாகராசா இணையருக்கும் தமிழ்ச்செம்மல் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
இவர் தமிழ்நாட்டு கலைஞர் தொலைக்காட்சியில் சுவிற்சர்லாந்தில் பேர்ண் வள்ளுவன் பள்ளியானது தமிழ்ப் ;புத்தாண்டைக் கொண்டாடுவதை முன்னுதாரணமாக பேசிப்பெருமைப்படுத்தியுள்ளார். அவரின் வருகையால் சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி பேருவகையடைகின்றது.
1.தமிழகத்தில் திருக்குறளை இகழ்ந்துபேசுதல் , பிறமொழியிலிருந்து உருவானது என்று தமிழுக்கு குந்தகமாக கருத்துரைத்தல், கருத்து வெளியிடல் பிறமொழியி லிருந்து திருக்குறள் உருவானது என்ற ஆதாரமற்ற தகவலைப்பரப்புவதை தடுக்க சட்டமியற்றவேண்டும்.
2.தமிழகத்தில் திருக்குறள் நூல், திருவள்ளுவர் முதன்மைப்படுத்தப்படவேண்டும். அதற்காக சட்டங்கள் இயற்றவேண்டும்; தமிழைக்கட்டாயபாடமாக்குவதுடன், தமிழ்நாட்டில் வாழ்வோர் அடிப்படையளவில் தமிழ்மொழித்தேர்வு ஒன்றை எழுதித் தேர்வில் தேவையான புள்ளிகளைப்பெற்றாலே தமிழ்நாட்டில் சட்டமுறையில் வாழ்விட அனுமதிபெற முடியும் என்றும் சட்டமாக்கவேண்டும்.
3.அரசியல், திரைத்துறை போன்றவற்றில் தமிழ்நாட்டில் ஈடுபடவிரும்புவோரும் அடிப்படையளவில் தமிழ்கற்கவேண்டும் என்பனபோன்றவற்றையும் கவனத்தில் எடுத்து எண்ணி சட்டங்கள் இயற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
4.ஆங்கில சொற்களை தமிழில் எழுதிப்பெயர்ப்பலகையிடுவதையும், பிறமொழி எழுத்துகளை(கிரந்த எழுத்துகளை இணைத்து எழுதுவதையும்) தமிழகத்தில் தடுக்கச்சட்டமியற்றவேண்டும்.
5.தமிழ்மன்னர்கள் ஆசியப்பகுதியில் கட்டிய கோவில்களை தமிழக அரசு அந்தந்த நாட்டு அரசுகளுடன்பேசி இதுதமிழ்மன்னர்களால் கட்டப்பட்டது என்ற தகவல் பலகைகளை தமிழக அரசுசார்பாக அவ்விடங்களில் நிறுவவேண்டும். என்ற ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மடல்ஒன்றினை சுவிற்சலார்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளிசார்பில் தமிழ்நாடு திரு.வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் மூலம் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுதல்மடல் ஒன்றைக் கையளித்ததுடன், தமிழ்புத்தாண்டு விழாவின் நினைவாக திருவள்ளுவராண்டு 2054 பொறிக்கப்பட்டு சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி எனப்பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கிண்ணமொன்றினையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்ராலின் அவர்களிடம் கையளிக்கும்படி வழங்கி வைக்கப்பட்டது.