சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் மூட்டிய தூயதமிழ்த் தீ! தமிழக மாணவருக்கு கிடைத்த விருது
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ''தமிழ் அகராதியியல் நாள் விழா''வில் அரியலூரைச் சேர்ந்த சாதனையாளர் த.தினேசுக்கு, 2022ஆம் ஆண்டுக்கான தூயதமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த விருதினை அவருக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் கலந்து சிறப்பித்தனர்.
திரு.தங்கராசா தினேசு அவர்கள் ஒரு மருத்துவக் கல்லுாரி மாணவனாக இருந்தும் தமிழ் மொழியில் பற்றாக இருப்பதோடு, துாய தமிழில் பேசவும், எழுதவும் முயன்று வருகின்றார்.
பல கதைகளை ஆக்கி உரைப்பதிலும் வல்லவராகவுள்ளார். அதன் விளைவாக பாட்டியின் ''சுருக்குப்பை'' என்ற ஒரு சிறுகதை நுாலையும் வெளியிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் தன்னை துன்புறுத்துவதாக புகாரளித்த புலம்பெயர்ந்த பெண்... நாடுகடத்தப்போவதாக மிரட்டல்
திரு.தினேசு அவர்களை துாயதமிழ் நடைமுறையில் கவனம் கொள்ளும் பொருட்டு, முதலில் உமது பெயரில் உள்ள ''ஸ்'' என்ற கிரந்த எழுத்தை அகற்றி தமிழில் ''சு'' எழுத்து இட்டு உமது பெயரை துர்யதமிழ்பெயராக வைத்துக்கொண்டு, உமது தமிழ்ப்பணியை தமிழ்மொழியின் நலன்சார்ந்து செயற்பாட்டால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ் உலகில் உமது பெயர் விளங்கும் என்று சொன்ன சொல்லை மந்திரமாகக் கொண்டு தமிழ்மொழிச் செயற்பாட்டளராக செயற்படத்தொடங்கினார்.
கனடாத் தமிழாழி தொலைக்காட்சி நிறுவனர் திரு.பாட்டருவி க.உயிரவன் அவர்களுக்கும் அறிமுகப்படுத்தி, இவரை தமிழுக்கான பணிகளுக்கு ஏற்ற வகைகளைச் செய்யுமாறும் வேண்டியதற்கிணங்க அவரும் இவரை கனடாத் தமிழாழி, தொலைக்காட்சியின் தமிழ்நாட்டு இணைப்பாளராக செயற்படும் பணியைக் கொடுத்து, பல தமிழ்சார் நிகழ்வுகளில் ஈடுபடுத்தி வளர்த்துள்ளார்.
இன்று தமிழ்நாட்டு அரசு இவருக்கு துாய தமிழ்க் காப்பாளர் விருது கொடுத்துள்ளது. இவரை நச்சில் (தியநுண்ணி) = கொரோனா காலத்தில் தினேசு பல உலக சாதனை நிகழ்வுகளில் பங்கெடுத்து உரையாற்றுவது, கதை சொல்வது என்று, தமிழில் ஈடுபாடாக இருந்ததை கவனித்த சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் இவரிடம் துாயதமிழ் பற்றி அறிவுறுத்தி, உச்சரிப்பையும் திருத்தி கொடுத்தார். அதற்கான ஊக்கத்தினை கொடுத்த சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி வாழ்த்தி மகிழ்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |