வரலாற்றில் சிறந்த 100 கால்பந்து வீரர்கள் பட்டியல்: கடும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்
வரலாற்றில் 100 சிறந்த கால்பந்து வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பலருக்கு உரிய மரியாதை
கால்பந்து உலகின் சிறந்த 100 வீரர்களை தெரிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று பட்டியலிட்டுள்ளது. இதில் தற்போதைய உச்ச நட்சத்திரங்கள் பலருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றே ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
@getty
லியோனல் மெஸ்ஸி வரலாற்றில் சிறந்த வீரர் என முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகக் கோப்பை நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே 86வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி ஐந்து முறை சேம்பியன்ஸ் லீக் வென்ற கரேத் பேல் 69வது இடத்தில் உள்ளார். அர்செனல் மற்றும் பிரான்ஸ் ஜாம்பவான் தியரி ஹென்றி 58வது இடத்தில் உள்ளார்.
போலியான பட்டியல்
லிவர்பூல் மற்றும் இங்கிலாந்து நட்சத்திரம் ஸ்டீவன் ஜெரார்ட் 82வது இடத்தில் உள்ளார். கால்பந்து ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் ஏமாற்றத்தை பதிந்து வருகின்றனர்.
@getty
முதலிடம் மெஸ்ஸி என்பதை ஏற்கலாம் ஆனால், இந்த பட்டியலை மொத்தமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது என சிலர் கொந்தளித்துள்ளனர். சிலர், இது அர்ஜென்டினா ரசிகர் வெளியிட்ட போலியான பட்டியல் என கிண்டலடித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |