ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5G ஃபோன்கள்!
உங்கள் பட்ஜெட் ரூ. 20,000-க்குள், ஆனால் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்ஃபோன் வாங்க விரும்புகிறீர்களா என்றால், இதோ உங்களுக்கான தரமான டாப் 5 ஸ்மார்ட்ஃபோன்கள்..,
இந்தியாவில் இன்னும் 5G சேவை தொடங்கப்படவில்லை என்றாலும், அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஏகப்பட்ட 5G ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில், ரூ. 20,000-க்குள் கிடைக்கக்கூடிய டாப் 5 போன்கள் தேர்ந்தெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1) iQoo Z3 5G
iQoo Z3 5G ஸ்மார்ட்போன் ரூ. 19,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. iQoo Z3 5ஜி, 6.58 இன்ச் முழு எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 768G SoC Adreno 620 GPU உடன் ஒருங்கிணைந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான OriginOS இல் இயங்குகிறது. இரண்டு 5ஜி சிம் கார்டுகள் பயன்படுத்தும் அம்சம் உள்ளது. இதில், பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. அதில், 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. எங்கள் மதிப்பாய்வின் போது, கேமராக்கள் சிறப்பாக இருப்பதைக் கண்டோம். ஆனால், உருவாக்கத் தரம் சிறப்பானதாகக் காணப்படவில்லை.
2) Realme 8 5G
நீங்கள் ரூ. 15,000 பாய்க்கு குறைவாக 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்று விரும்பினால், Realme 8 5G மாடலை தேர்ந்தெடுக்கலாம். இந்த ஸ்மார்ட்ஃபோன் 6.5 இன்ச் முழு HD+ (1,080 × 2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 20:9 ஆஸ்பெக்ட் விகிதத்தையும், 90 Hz புதுப்பிப்பு ரேட்டையும் கொண்டுள்ளது. இந்த தொகுப்பில், இது மீடியா டெக் டைமன்சிட்டி 700 SoC உடன் வருகிறது. மொபைலின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 18W குவிக் சார்ஜ், வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது.
3) POCO M3 Pro 5G
ரியல்மி 8 5ஜி மாடல் போலவே, POCO M3 Pro 5G, 6.53 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 90 Hz புதுப்பிப்பு ரேட் கொண்டுள்ளது. இதிலே 6 ஜிபி RAM மற்றும் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. ரியல்மியின் டைமன்சிட்டியான 700 SoC ஐ கொண்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mah பேட்டரி உள்ளது. இதன் விலை ரூ. 13,000 ஆகும்.
4) Redmi Note 10T 5G
Xiaomi-யின் துணை பிராண்ட் Redmi, தனது முதல் 5ஜி தொலைபேசியை மிகவும் பிரபலமான நோட் சீரிஸின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi Note 10T 5G ஒரு 90Hz புதுப்பிப்பு ரேட், 6.5 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதன் விலை ரூ.13,999. மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC மற்றும் 48 மெகாபிக்சல் கொண்ட பிரதான கேமரா உள்ளது. இதில், 18W சார்ஜிங் வழங்கும் 5,000 mAh பேட்டரி உள்ளது. மேலும், பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் (சைட்-மவுண்டிங்) பொருத்தப்பட்ட ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனரும் உள்ளது. இந்தியாவில் ரெட்மியின் முதல் 5ஜி ஸ்மார்ட்ஃபொன் விற்பனை ஜூலை 26ஆம் தேதி அன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5) Oppo A74 5G
Oppo A74 5G - இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்பவில்லை ரூ. 19,990 ஆகும். Oppo A74 5ஜி, ஃபென்டாஸ்டிக் பர்பில் மற்றும் ஃப்ளூயிட் பிளாக் என்ற இரண்டு வண்ணங்களில் வருகிறது. இது 90 Hz புதுப்பிப்பு ரேட்டுடன் 6.5 இன்ச் முழு HD+ (1,080 × 2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மற்ற மாடல்களில் இருந்து கொஞ்சம் மாறுதலாக, மீடியாடெக் பிராஸசருக்கு பதிலாக, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 SoC ஐ கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகியவற்றுடன், குவாட் ரியர் கேமரா செட்டப்பும் உள்ளது.