வேகமாக முடி வளர இந்த மூலிகை எண்ணெய் இருந்தால் போதும்...!
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது முடியை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் சில குறைப்பாட்டின் காரணமாக ஒரு சிலருக்கு முடி வளர்வது குறைவு. முடியை நீளமாகவும் கருமையாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி உபயோகிப்பது வழக்கம். ஆனால் அது பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் தான் அதிகமாக ஏற்படும்.
எனவே வீட்டில் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து எப்படி முடியை நீளமாகவும் கருமையாகவும் வளர்க்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முடி வளர்ச்சிக்கு உதவும் ஆயுர்வேத எண்ணெய்கள்
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றது. இது பளபளப்பான சருமத்திற்கும் நீளமான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
லிப்போபுரோட்டீன், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையை உள்ளடக்கிய எண்ணெய் தான் இது. எனவே இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது முடி முதல் தோல் வரை ஊடுருவி நன்மையை வழங்குகிறது.
லாரிக் அமிலம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் இருக்கும் இந்த தேங்காய் எண்ணெய் முடியை பலப்படுத்தி வைத்திருக்கிறது எனலாம். எனவே இதை தினமும் உங்கள் தலை முடிக்கு பயன்படுத்தி பாருங்கள்.
முருங்கை எண்ணெய்
முருங்கையின் காய், இலை, பூ, பட்டை என அனைத்தும் பல மருத்துவ குணங்களை கொண்டவை. இதில் தாதுக்களும் வைட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.
சமையலுக்கு மாத்திரமல்லாமல் கூந்தலுக்கும பயன்படுத்துவதால் உங்களது முடி காடு மாதிரி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
பிரிங்ராஜ் எண்ணெய்
பிரிங்ராஜ் எண்ணெய் மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், செழிப்பான, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இதை நாள் தவறாமல் தினமும் பயன்படுத்தி வருவதன் மூலம் நீங்கள் அடர்த்தியான மற்றும் நீளமாக முடியை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |