100வது டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு: முதலிடத்தில் யார் தெரியுமா?
நூறாவது டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியவர்கள் குறித்து இங்கே காண்போம்.
5.அனில் கும்ப்ளே
டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அனில் கும்ப்ளே [Anil (619). இவர் 2005ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக 100வது டெஸ்டில் ஆடினார். அப்போட்டியில் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
4.ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), தனது 100வது டெஸ்ட் போட்டியில் 77 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை (இங்கிலாந்துக்கு எதிராக) வீழ்த்தினார். அஸ்வின் டெஸ்டில் மொத்தம் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
3.ஷேன் வார்னே
அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே (Shane Warne) 708 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் ஆவார்.
இவர் 2002யில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது 100வது டெஸ்டில் 161 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2.முத்தையா முரளிதரன்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி (800) முதலிடத்தில் இருப்பவர் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan).
இவர் 2006யில் வங்காளதேசத்திற்கு எதிராக தனது 100வது டெஸ்டை ஆடினார். அப்போட்டியில் 54 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
1.மிட்செல் ஸ்டார்க்
அவுஸ்திரேலிய வேகப்புயல் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) தனது 100வது டெஸ்டில் 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது 100வது டெஸ்டில் சிறந்தபந்துவீச்சாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |