இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி: ரூ.9,999க்கு அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
வெறும் ரூபாய் 9,999க்கு லாவா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய மார்க்கெட்டில் நிலவும் போட்டி
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து இந்திய சந்தையில் 5ஜி போன்களுக்கான போட்டி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
ஏனென்றால் 3ஜி மற்றும் 4ஜி போன்களை வைத்து இருக்கும் மக்கள் பலரும் 5ஜி போன்களை வாங்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
இதனால் பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு குறைவான விலையில் 5ஜி போன்களை தயாரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
களமிறங்கிய லாவா
இந்நிலையில் லாவா நிறுவனம் மிக குறைந்த விலையில் லாவா பிளேஸ் 2 5ஜி என்ற போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நவம்பர் 2ம் திகதி லாவா பிளேஸ் 2 5ஜி போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், லாவா நிறுவனம் இன்று முதல் லாவா பிளேஸ் 2 5ஜி போனை இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
சிறப்பம்சம் மற்றும் விலை
லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. லாவா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் வழியாக லாவா பிளேஸ் 2 5ஜி போன் ரூ.9,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
720x1600 பிக்சல்ஸ் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் ஆகிய அம்சங்கள் லாவா போனில் உள்ளது.
50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 0.08 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. 5000mAh பேட்டரி 18w பாஸ்ட் சார்ஜிங் வசதி லாவா பிளேஸ் 2 5ஜி போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |