வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம்: சுவிஸ் நகரமொன்றிற்கு கிடைத்துள்ள சிறப்பு

Switzerland
By Balamanuvelan Dec 01, 2022 05:19 AM GMT
Report

சுவிட்சர்லாந்திலேயே, வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரமாக பேசல் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த மற்றும் மோசமான நகரங்களை வரிசைப்படுத்தும் சர்வதேச தரவரிசைப்படுத்தல் ஒன்றில், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முன்பு பட்டியலில் முக்கிய இடம்பிடித்த நகரங்களை பின்னுக்கு தள்ளிய பேசல் நகரம்

பொதுவாக இதுபோன்ற பட்டியல்களில் சூரிச் அல்லது ஜெனீவா போன்ற நகரங்கள்தான் முக்கிய இடம்பிடிக்கும். ஆனால், இம்முறை அவற்றை பின்னுக்குத் தள்ளி பேசல் இம்முறை முன்னேறியுள்ளது.

InterNations என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரங்கள் குறித்த கருத்துக்களும் அனுபவங்களும் கேட்கப்பட்டன.

அவ்வகையில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உலகிலுள்ள 50 நகரங்களில், முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த ஒரே சுவிஸ் நகரம் பேசல்தான்.

பேசல் பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

பட்டியலில், சூரிச் 20ஆவது இடத்தையும்,ஜெனீவா 34ஆவது இடத்தையும்தான் பிடிக்க முடிந்துள்ளது.

வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம்: சுவிஸ் நகரமொன்றிற்கு கிடைத்துள்ள சிறப்பு | Best City For Expats To Live In

Image by Roland from Pixabay

எதனால் பேசல் நகரத்துக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது?

ஆய்வில் பங்கேற்ற, பேசல் நகரில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் நிதி நிலைமை திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். சொல்லப்போனால், நிதி நிலைமை விடயத்தில் உலகிலேயே பேசல் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

எளிதாக வங்கிக் கணக்கு துவங்குவது, வீட்டில் அதிவேக இன்டர்னெட் ஆகிய விடயங்களும் திருப்திகரமாக இருப்பதாக பேசல்வாழ் வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வேறென்னென்ன விடயங்களில் பேசல் நகரம் சிறந்து விளங்குகிறது?

மேற்குறிப்பிட்ட விடயங்கள் மட்டுமின்றி, வாழ்க்கைத்தரத்திலும் அதிக புள்ளிகள் பெற்றுள்ளது பேசல். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை விடயங்களில், உலகிலேயே இரண்டாவது இடம், பாதுகாப்பில் உலகிலேயே நான்காவது இடம் என பல விடயங்கள் பேசல் நகரத்தின் பெருமைக்கு காரணமாக உள்ளன.

இவைபோக, நகரச் சூழல், காற்றின் தரம், பாதுகாப்பு, பொதுப்போக்குவரத்து, ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவற்றில் முதலிடம், வேலை வாய்ப்புகள், என இத்தனை விடயங்கள் வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம் என்ற பெருமையை பேசல் நகரத்துக்கு பெற்றுத்தர காரணமாக அமைந்துள்ளன.

குறைகள் ஏதாகிலும் உண்டா?

இத்தனை நல்ல விடயங்கள் இருந்தாலும், சில குறைகளும் பேசல் நகரில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு இல்லாமல் இல்லை.

எளிதாக குடியமர்தல் என்ற விடயத்தில் பேசல் நகரம் 42ஆவது இடத்தையே பிடித்துள்ளது. அதாவது, அக்கம்பக்கத்தவர்கள் பொதுவாக நட்பு பாராட்டுவதில்லை என 30 சதவிகித வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், பொழுதுபோக்கு அம்சங்கள் விடயத்திலும் பேசல் 48ஆவது இடத்தையே பிடித்துள்ளது. 20 சதவிகிதம் வெளிநாட்டவர்கள், கலாச்சாரம் மற்றும் இரவு வாழ்க்கை, உணவு வகைகள் ஆகியவை திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்கள். உண்மையில் உணவு விடயத்தில் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது பேசல் நகரம்  

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US