இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த மின்சார கார்கள்
இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. குறைந்த செலவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் நவீன வசதிகள் காரணமாக மக்கள் அதிகமாக EV-களை தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்.
CarDekho வெளியிட்ட பட்டியலில், ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த 6 மின்சார கார்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த மாடல்கள்
MG Comet EV

விலை: ரூ.7.50 லட்சம் முதல் 9.56 லட்சம்.
பேட்டரி & ரேஞ்ச்: 17.3 kWh பேட்டரி, 42 PS சக்தி, 230 km வரை ரேஞ்ச்.
Tata Tiago EV

விலை: ரூ.7.99 லட்சம் முதல் 11.14 லட்சம்.
பேட்டரி & ரேஞ்ச்: 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரி விருப்பங்கள். அதிகபட்ச ரேஞ்ச் 293 km.
Tata Punch EV

விலை: ரூ.9.99 லட்சம் முதல் 14.29 லட்சம்.
பேட்டரி & ரேஞ்ச்: 25 kWh மற்றும் 35 kWh பேட்டரி. அதிகபட்ச ரேஞ்ச் 421 km.
Tata Tigor EV

விலை: ரூ.12.49 லட்சம் முதல் 13.75 லட்சம்.
பேட்டரி & ரேஞ்ச்:26 kWh பேட்டரி, 315 km வரை ரேஞ்ச்.
Tata Nexon EV

விலை: ரூ.12.49 லட்சம் முதல் 17.49 லட்சம்.
பேட்டரி & ரேஞ்ச்: 30 kWh மற்றும் 45 kWh பேட்டரி விருப்பங்கள். அதிகபட்ச ரேஞ்ச் 489 km.
MG Windsor EV

விலை: ரூ.12.65 லட்சம் முதல் 18.39 லட்சம்.
பேட்டரி & ரேஞ்ச்: 38 kWh மற்றும் 52.9 kWh பேட்டரி. அதிகபட்ச ரேஞ்ச் 449 km.
சிறப்பம்சங்கள்
இந்த மாடல்கள் அனைத்தும் டச் ஸ்கிரீன், சன்ரூஃப், 360 டிகிரி camera, ventilated சீட்கள் போன்ற நவீன வசதிகளுடன் வருகிறது.
இந்த பட்டியலில் Tata நிறுவனத்தின் ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. 6 மாடல்களில் 4 டாடா நிறுவன கார்கள் உள்ளன.
ரூ.15 லட்சத்திற்குள், இந்தியாவில் EV வாங்க விரும்புவோருக்கு MG மற்றும் Tata நிறுவனங்களின் இந்த மாடல்கள் சிறந்த தேர்வாக இருக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |