சிறுநீரகங்களின் நச்சுக்களை சுத்தப்படுத்த உதவும் இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
Best foods that support kidney function and detox- நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று.
சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.
மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.
சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தவகையில், சிறுநீரகங்களின் நச்சுக்களை சுத்தப்படுத்த உதவும் இயற்கை உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்?
ஆப்பிள்- ஆப்பிள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால், சிறுநீரகங்களுக்கு வரும் வேலைச்சுமை குறைகிறது. மேலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சுரைக்காய்- சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளதால், உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. சுரைக்காய் சாறு குடிப்பது, இரத்தத்தில் சர்க்கரை அல்லது சோடியம் அளவை அதிகரிக்காது. இது சிறுநீரகங்கள் சீராக செயல்பட உதவுகிறது.
கொத்தமல்லி விதை- கொத்தமல்லி விதைகள் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, உடலில் உள்ள அதிக சோடியத்தை வெளியேற்ற உதவுகின்றன. இதனால் உடலில் நீர் தேக்கம் குறைந்து, சிறுநீரக அழுத்தம் குறைகிறது. இரவில் ஊறவைத்த நீரை காலை குடிப்பது நல்ல பழக்கம்.
காலிஃபிளவர்- காலிஃபிளவர் மற்ற காய்கறிகளை விட குறைந்த பொட்டாசியம் கொண்டது. ஆனால் இதில் நார்ச்சத்து, வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது உடலில் நச்சுகளை குறைத்து, சிறுநீரகங்களுக்கு மறைமுகமாக உதவுகிறது.
பூண்டு- பூண்டில் உடலில் அழற்சியை குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களை பாதிக்கும் முக்கிய காரணம் என்பதால், பூண்டு அதை பாதுகாக்க உதவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |