தீபாவளி கொண்டாட்டம்: இந்தியாவில் எழில் மிஞ்சும் இந்த 6 இடத்திற்கு செல்லலாம்..!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று, சிலர் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியிருப்பார்கள். பலர் தங்கள் குடும்பத்தினருடன் வெளியில் செல்வார்கள்.
தீபாவளி என்பது நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தாலும் எங்கும் காணக்கூடிய ஒரு பண்டிகை.
தீபாவளி பண்டிகையை உங்கள் குடும்பத்துடன் சில அற்புதமான மலைவாசஸ்தலங்களின் பள்ளத்தாக்குகளில் கொண்டாட விரும்பினால், சில சிறந்த மலைவாசஸ்தலங்களைப் பற்றி நீங்கள் தற்போது தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சிம்லா
நாட்டின் எந்தவொரு அற்புதமான மற்றும் அழகான மலைவாசஸ்தலத்தில் தீபாவளியைக் கொண்டாடும் போது, பலர் முதலில் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவின் அழகிய பள்ளத்தாக்குகளை தான் நினைப்பார்கள். தீபாவளிக்கு பாதுகாப்பான மலைவாசஸ்தலமாகவும் இது கருதப்படுகிறது.
தீபாவளியையொட்டி சிம்லா மால் சாலை (Mall Road) முதல் காந்தி சவுக் வரை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும். தீபாவளி பண்டிகையையொட்டி, மால் ரோட்டில் சுற்றுலா பயணிகள் இரவு முழுவதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிம்லாவில் தொலைதூர மலைகளில் வண்ண விளக்குகள் எரியும்போது, நகரம் முழுவதும் பிரகாசமாக காட்சியளிக்கும்.
முசோரி
உத்தரகாண்டின் அழகிய பள்ளத்தாக்குகளில் தீபாவளியைக் கொண்டாட விரும்பினால் நீங்கள் முசோரிக்கு செல்லலாம். இந்த அழகிய மலைவாசஸ்தலம் மலைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.
தீபாவளியையொட்டி டெல்லி, டெல்லி என்சிஆர், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் பல நகரங்களில் இருந்து மக்கள் தீபாவளியைக் கொண்டாட முசோரிக்கு வருகிறார்கள்.
தீபாவளியை முன்னிட்டு முசோரி மால் சாலை முதல் காந்தி சவுக் வரை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். காந்தி சௌக்கில் பலர் இரவு வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.
தர்மசாலா
கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடிக்கு மேல் உயரத்தில் தீபாவளி கொண்டாடுவதில் வித்தியாசமான அனுபவம் உள்ளது. ஆம் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் இடம் தர்மஷாலா.
தீபாவளியை முன்னிட்டு தர்மசாலாவின் தெருக்கள் மின்விளக்குகளால் ஜொலிக்கும்போது அந்த காட்சியை பலரும் பார்ப்பார்கள்.
ரிஷிகேஷ்
ரிஷிகேஷ் தீபாவளியைக் கொண்டாட சிறந்த மலைவாசஸ்தலமாகக் கருதப்படுகிறது. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் தனது அழகால் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்து வருகிறது.
தீபாவளியையொட்டி, திரிவேணி காட் முதல் லட்சுமண ஜூலா வரையிலும், ராம் ஜூலா முதல் பாரத் மந்திர் வரையிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வாகமன்
கேரள மாநிலத்திலுள்ள இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் மலைவாசஸ்தலம் வாகமன் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் நின்று கேரளத்தின் அழகை ரசிக்க ஏற்ற மலையாகவும், பசுமையான சமவெளிகள், விண்ணை முட்டும் மலைகள், வளைந்தோடும் ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள் பல இங்குள்ளன.
ஊட்டி
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இடம் தான் ஊட்டி. மலைகளின் ராணி என்றழைக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்கள் குறைந்த செலவில் பயணம் செல்ல வேண்டும் என்றால் முதலில் தேர்வு செய்யும் இடம் இது என்றும் கூறலாம். இதே போன்று கொடைக்கானலும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |