குறைந்த முதலீட்டில் அதிக வருவாய்.., பெண்களுக்கான சிறந்த 5 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்
தற்போதைய காலத்தில் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் சரியான முறையில் சேமிப்பதும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக, இல்லத்தரசிகள் சிறிய தொகைகளை தொடர்ந்து சேமிப்பதன் மூலம் எதிர்கால நிதி பாதுகாப்பை உருவாக்க முடியும்.
அதன்படி, போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள் நிலையான வருமானத்தை வழங்குகின்றன.
அந்தவகையில், பெண்களுக்கு ஏற்ற 5 முக்கிய போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

1. தொடர் வைப்பு (Recurring Deposit)
மாதந்தோறும் சிறிய தொகையை சேமிக்க விரும்புவோருக்கு இந்த திட்டம் மிகவும் சிறந்தது. ரூ.100 முதல் முதலீடு செய்யும் இந்த திட்டம் 5 ஆண்டுகள் கால அவகாசம் கொண்டது.
2. மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme)
ஒரே நேரத்தில் ஒரு தொகையை முதலீடு செய்து மாதந்தோறும் நிலையான வருமானம் பெற விரும்புவோருக்கு இந்த திட்டம் சிறந்தது.
3. பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)
15 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட இந்த திட்டம் நீண்டகால சேமிப்புக்கு சிறந்தது. இந்த திட்டத்தில் கூட்டு வட்டி மற்றும் வரிச்சலுகை கிடைப்பதால் எதிர்காலத்திற்கான பெரிய நிதியை பெற முடியும்.
4. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate)
பாதுகாப்பான முதலீட்டுடன் நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இந்த திட்டம் மிகவும் சிறந்தது. அரசின் உத்தரவாதத்துடன் இந்த திட்டத்தில் கூட்டு வட்டி பலனும் கிடைக்கிறது.
5. செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana)
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகளுக்காக சேமிக்க இந்த திட்டம் மிகவும் பயனுள்ளது. இதில் அதிக வட்டி விகிதம் மற்றும் வரிச்சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |