ஓட்ஸை இரவு முழுக்க ஊறவைத்து சாப்பிடுவது தான் சிறந்தது... ஏன் தெரியுமா?
cholesterol
weight loss
By Kishanthini
பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்றாலே பெரும்பாலான மக்களின் தேர்வு ஓட்ஸ் உணவாகத்தான் இருக்கும்.
அதனால் தான் நிறைய மக்கள் தங்களின் காலை உணவாக ஓட்ஸை எடுத்துக் கொள்கின்றனர்.
உண்மையின் ஓட்ஸை இரவில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளும் போது நீங்கள் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
அந்தவகையில் ஓட்ஸை இரவு நேரம் வைத்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- ஓட்ஸை ஊற வைக்காமல் சாப்பிடுவதை விட இரவில் பால் மற்றும் தண்ணீரிலும் ஊறவைத்து சாப்பிடுவது உங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்க உதவும்.
- இரவில் ஊற வைத்த ஓட்ஸூடன் நட்ஸ் மற்றும் பழங்கள் சேர்த்து எடுத்து வரலாம். ஓட்ஸ் ஒரு க்ளூட்டன் இல்லாத உணவு என்பதால் பசைய அழற்சி இருப்பவர்கள் கூட இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
- ஓட்ஸில் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இதை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்க முடியும்.
- ஓட்ஸில் நார்ச்சத்துக்கள், புரதச்சத்து போன்ற பல சத்துக்கள் காணப்படுகிறது. ஓட்ஸில் மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது. இதிலுள்ள சத்துக்கள் உங்க குடலை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.
- நீங்கள் ஓட்ஸை இரவிலே ஊற வைக்கும் போது அதை எளிதாக சமைத்து விட முடியும். எனவே விரைவிலேயே சமைத்து விடுவதால் அதன் சத்துக்கள் குறையாது.
- எனவே உங்க காலை உணவை சிறப்பான ஒன்றாக மாற்ற ஓட்ஸ் உதவி செய்யும். இனிமேல் இரவில் ஊற வைத்த ஓட்ஸை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை பெற உதவி செய்யும். ஓட்ஸை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் தயிர், பால் அல்லது தண்ணீர் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுங்கள்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US