வெளிநாட்டு கல்வி வேண்டுமா..! அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த 5 பல்கலைக்கழகங்கள் இதோ
அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் உலக தரவரிசையில் பிரகாசமான இடத்தை பிடித்துள்ளது, அவுஸ்திரேலியாவின் 9 பல்கலைக்கழகங்கள் டாப் 100 இடங்களை பிடித்துள்ளது.
2024 QS உலக தரவரிசை பல்கலைக்கழகங்களில் அவுஸ்திரேலியா சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ளது, மொத்தம் 38 நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மெல்போர்ன் பல்கலைக்கழகம்
2024 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் டாப் பல்கலைக்கழகமாக மெல்போர்ன் பல்கலைக்கழகம் (University of Melbourne) திகழ்கிறது.
1853 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அரசு நிறுவனம், மெல்போர்ன் மற்றும் விக்டோரியாவில் வளாகங்களை கொண்டுள்ளது.
கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் மெல்போர்ன் சிறந்து விளங்குகிறது.
65,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை மெல்போர்ன் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
தரவரிசைகள் படி, உள்நாட்டு அளவில் 1வது இடத்திலும், அறிக்கையின் தகவல்படி, மெல்போர்ன் பல்கலைக்கழகம் 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 27 வது இடத்திலும் உள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்(University of New South Wales) சர்வதேச ஆராய்ச்சி வலையமைப்பில் சிறப்பாக திகழ்கிறது.
அதே சமயம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக பட்டதாரிகள் அதிக வேலைவாய்ப்பு விகிதத்தை கொண்டுள்ளனர்.
தரவரிசைகள் படி, உள்நாட்டு அளவில் 4வது இடத்திலும், அறிக்கையின் தகவல்படி, நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 36 வது இடத்திலும் உள்ளது.
சிட்னி பல்கலைக்கழகம்
அவுஸ்திரேலியாவின் பழமையான பல்கலைக்கழகமாக (1850 இல் நிறுவப்பட்டது) சிட்னி பல்கலைக்கழகம்(University of Sydney) திகழ்கிறது. இது செழுமையான கல்வி பாரம்பரியத்தை வழங்குகிறது.
சிட்னியில் அமைந்துள்ள இந்த அரசு நிறுவனம், வேளாண்மை, மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 16 கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
தரவரிசைகள் படி, உள்நாட்டு அளவில் 2வது இடத்திலும், அறிக்கையின் தகவல்படி, சிட்னி பல்கலைக்கழகம் 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 29 வது இடத்திலும் உள்ளது.
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம்
1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (Australian National University), அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெராவில் அமைந்துள்ளது.
30 க்கும் மேற்பட்ட நாடுகளில் 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் மாணவர் பரிமாற்ற கூட்டு ஒப்பந்தங்கள், பல்கலைக்கழகத்தின் உலகளாவிய ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.
தரவரிசைகள் படி, உள்நாட்டு அளவில் 6வது இடத்திலும், அறிக்கையின் தகவல்படி, அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 85 வது இடத்திலும் உள்ளது.
மோனாஷ் பல்கலைக்கழகம்
மோனாஷ் பல்கலைக்கழகம்(Monash University) அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் விக்டோரியாவில் வளாகங்களை கொண்டுள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் கூடுதல் வளாகங்களை கொண்டுள்ளது, இது அவர்களின் சர்வதேச செல்வாக்கை பிரதிபலிக்கிறது.
தரவரிசைகள் படி, உள்நாட்டு அளவில் 3வது இடத்திலும், அறிக்கையின் தகவல்படி, மோனாஷ் பல்கலைக்கழகம் 2024 உலக பல்கலைக்கழக தரவரிசை 35 வது இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |