உயர்தர கல்வியை வழங்கும் குவாடலூப் பல்கலைக்கழகம்
பொதுவாகவே அனைவருக்கும் வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, சிறந்த பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுப்பதாகும். உள்ளூரில் இருந்த வெளியூர் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள்தனக்கு தகுந்தார் போல் சுற்று சூழலையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
குறிப்பாக கூற வேண்டுமென்றால், தமிழ் மக்கள் வாழும் பகுதியில் வாழ்வது சிறந்த தேர்வாக இருக்கும். தமிழ் மக்கள் பெரும்பாலும் தமிழ்நாடு, இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா பெரிய பெரிய நாடுகளில் வசிப்பார்கள்.
ஆனால் சின்ன சின்ன தீவுகளிலும் தமிழ்ர்கள் வசிக்கிறார்கள். அப்படியான ஒர் தீவு தான் பட்டாம்பூச்சியை போன்று இரண்டு பெரிய தீவுகளுடன் காட்சியளிக்கும் குவாடலூப்.
குவாடலூப்
கடற்கரைகள், காடு மலைகள் என இயற்கை எழில் கொஞ்சும் தீவான இந்த தீவிிற்கு தமிழகத்தில் இருந்து 45 ஆயிரம் தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குவாடலூப் தீவு வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் கரீபியனில்தான் அமைந்துள்ளது.
கியூபா, வெனிசுலா, டொமினிக் குடியரசு, பிரெஞ்ச் கயானா, விர்ஜின் தீவு, டொமினிகா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா உள்ளிட்ட தீவு மற்றும் நாடுகள் இந்த இடத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
இந்த தீவில் வசிக்கும் மக்கள் தங்களது படிப்பையும் சிறப்பாகவே நடத்தி செல்கின்றனர்.
இங்கு சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்புத் திட்டங்கள் காணப்படுவதால் புலம்பெயர்ந்தோருக்கான பிரபலமான இடமாக இது காணப்படுகிறது.
குவாடலூப்பில் உயர்தரக் கல்வி வழங்கும் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளன.
குவாடலூபில் உள்ள கல்வி நிறுவனங்கள்
அழகிய தீவில் அமைக்கப்பட்டுள்ள அண்டிலிஸ் பல்கலைக்கழகம் மிகவும் பிரபல்யமான கல்வி நிறுவனமாகும். இது ஆங்கிலத்தில் University of the Antilles என அழைக்கப்படுவதோடு பொதுப் பல்கலைக்கழகமாகவும் கருதப்படுகிறது.
பல்கலைக்கழகம் மூன்று வளாகங்களைக் கொண்டுள்ளது. குவாடலூப்பில் (Guadeloupe) இரண்டும், மார்டினிக்கில் (Martinique) ஒன்றும் காணப்படுகிறது.
இந்த பல்கலைக்கழகம் மாணவர்களின் பல்வேறு ஆர்வங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு படிப்புகள் மற்றும் திட்டங்களை வழங்குகின்றன.
பாடத்திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, சிறந்த கல்வியை வழங்கி வருகிறது.
மேலும் குவாடலூப் மாணவர்களுக்கு சாதகமான வேலையும் வழங்கப்படுகிறது. சுற்றுலா, விவசாயம் மற்றும் சேவைகள் போன்ற துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
படிக்கும் போது வேலை செய்ய விரும்பும் மாணவர்கள் தங்கள் செலவினங்களை கட்டப்படுத்திக்கொள்வதற்கு பகுதி நேர வேலையிலும் ஈடுபடலாம்.
தற்போது அந்த தீவில் 35,000 தமிழர்கள் வசித்து வருவதாகவும், அவர்களின் ஒரு சிலருக்கே தமிழ் மொழி பேசத் தெரியும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |