ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) 11 பல்கலைக்கழகங்கள் உலக பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
மேலும் 8 பல்கலைக்கழகங்கள் அரபு பிராந்திய பல்கலைக்கழக தரவரிசைகளின் 2024 பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகப்பாரிய உயர்கல்வி நிறுவனம் Higher Colleges of Technology ஆகும். இது நாடு முழுவதும் சுமார் 17 வளாகங்களைக் கொண்டுள்ளது.
கூடுதலாக, மற்ற நாடுகளில் உள்ள பல உயர் தரநிலை பல்கலைக்கழகங்கள் ஐக்கிய அரபு அமீராகத்தில் கிளை வளாகங்களைக் கொண்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்ந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களைப் பற்றி இங்கு அறிந்துகொள்வோம்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் (United Arab Emirates University)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் உலகளாவிய தரவரிசையில் 284 வது இடத்தில் உள்ளது.
இப்பல்கலைக்கழகம் அபுதாபியின் எமிரேட்டில் உள்ள அல் ஐன் நகரில் அமைந்துள்ளது.
1976இல் நிறுவப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும்.
அரசு மற்றும் வணிகத் துறைகளில் பல சக்திவாய்ந்த தலைவர்கள் இங்கு பயின்றுள்ளனர்.
ஷார்ஜாவின் அமெரிக்க பல்கலைக்கழகம் (American University of Sharjah)
ஷார்ஜா அமெரிக்க பல்கலைக்கழகம் (AUS) உலகளாவிய தரவரிசையில் 348வது இடத்தில் உள்ளது.
UAE மற்றும் US ஆகிய இரண்டிலும் உரிமம் பெற்ற, AUS உயர்கல்வியின் அமெரிக்க மாதிரியின் அடிப்படையில் படிப்புகளை வழங்குகிறது.
இது சர்வதேச மாணவர்களிடையே அதிகமாக தேர்ந்தெடுக்கப்படும் பிரபலமான பல்கலைக்கழகம் ஆகும். இதன் விளைவாக மிகவும் மாறுபட்ட மாணவர் அமைப்பு இங்கு உள்ளது.
கலீஃபா பல்கலைக்கழகம் (Khalifa University)
கலீஃபா பல்கலைக்கழகம் என்பது ஒரு இலாப நோக்கற்ற அறிவியல் சார்ந்த பல்கலைக்கழகமாகும், இது அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாக 2007-இல் அபுதாபியில் நிறுவப்பட்டது.
இது தற்போது சுமார் 1,500 மாணவர்களுக்குக் கற்பிக்கிறது. ஆனால், புதிய வளாகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் 6,000 மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் கற்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பல்கலைக்கழகம் அமெரிக்க உயர்கல்வி கட்டமைப்பைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் சுற்றியுள்ள பிராந்தியத்தில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக உலகளாவிய கூட்டாளிகள், ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்கி வருகிறது.
ஷார்ஜா பல்கலைக்கழகம் (University of Sharjah)
ஷார்ஜா பல்கலைக்கழகம் ஷார்ஜாவின் எமிர், சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமியால் 1997-இல் நிறுவப்பட்டது.
இப்பல்கலைக்கழகம் உலக பல்கலைக்கழக தரவரிசையில் 601-650 தரவரிசையில் உள்ளது.
இந்த பல்கலைக்கழகம் மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் முன்னணி கல்வி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஷார்ஜாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
துபாய் அமெரிக்க பல்கலைக்கழகம் (American University in Dubai)
துபாய் அமெரிக்கன் யுனிவர்சிட்டி (AUD) 1995-இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும், இது உலகளாவிய தரவரிசையில் 601-650 தரவரிசையில் உள்ளது.
சுமார் 2,585 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், மாணவர் அமைப்பில் 108 தேசிய இனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகம் அதன் அனைத்து திட்டங்களுக்கும் US மற்றும் UAE அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது, மேலும் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடங்குவதற்கு முன் அவர்களின் மொழித் திறனை வளர்ப்பதற்காக ஆங்கிலப் புலமைக்கான மையத்தில் (CfEP) தீவிர ஆங்கில மொழித் திட்டங்களை வழங்குகிறது.
சயீத் பல்கலைக்கழகம் (Zayed University)
சயீத் பல்கலைக்கழகம் 1998-இல் நிறுவப்பட்டது. தற்போது 158 சர்வதேச மாணவர்களுடன் கிட்டத்தட்ட 6,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இளங்கலைக் கட்டணம் US$20,000 முதல் US$22,000 வரை இருக்கும், முதுகலை கட்டணம் US$30,000 வரை இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |