அடிக்கடி முகத்தில் பால் பருக்கள் வருதா? இதனை போக்க என்ன செய்யலாம்?
பொதுவாக பால் கட்டி மூக்கு மற்றும் கன்னத்தில் தோன்றும். இந்த பால்கட்டியை மருத்துவ மொழியில் மிலியா என்று கூறுகின்றனர். மிலியா மேல் தோலின் மேல் பகுதியில் பொதுவாக உருவாகும்.
ஆனால் இது உடலில் எந்தப் பகுதியிலும் இவை தோன்றலாம். முகம், கழுத்து, உச்சந்தலை , மார்பு, முதுகு மற்றும் கைகளின் பின்புறம் இவை தோன்றலாம்.
சருமத்தின் வறண்ட தன்மை, பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.
இது மிலியா ஏற்பட ஒரு காரணமாகவும் உள்ளது. அழுக்கான சருமத்தால் சரும எரிச்சல் அல்லது ஓவ்வாமை ஏற்படுகிறது, இதுவே மிலியாவிற்கு வழி வகுக்கிறது.
எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. தற்போது இதுபோன்ற பால்கட்டிகளை போக்க கூடிய வழிமுறை ஒன்றை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேன் - 1 ஸ்பூன்
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- ஜோஜோபா எண்ணெய் - 1 - 2 ஸ்பூன்
- ஓட்ஸ் - 1 ஸ்பூன்
செய்முறை
மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். முகத்தை சுத்தமாகக் கழுவவும். பின்பு முகத்தை மென்மையாக துடைத்துக் கொள்ளவும். சுத்தமாகக் கழுவி, காய்ந்த முகத்தில் இந்த ஸ்க்ரப்பை தடவவும். 3-5 நிமிடங்கள் சுழல் வடிவத்தில் மென்மையாக முகத்தை மசாஜ் செய்யவும்.
வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். தேவைப்பட்டால் சோப் கொண்டு முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். முகம் காய்ந்தவுடன் மாயச்ச்சரைசெர் தடவலாம்.
தேன், காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. வறண்ட சருமத்தை எதிர்த்து போராடுவது மிலியாவைப் போக்கும் ஒரு வழியாகும்.