ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் - 50 வருடங்களுக்கு இயங்கும் அணுசக்தி பேட்டரி
50 வருடங்களுக்கு இயங்கும் அணுசக்தி பேட்டரி ஒன்றை சீனாவை சேர்ந்த பேட்டரி நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.
அணுசக்தி பேட்டரி
BV100 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பேட்டரியானது, ஒரு சிறிய நாணயத்தின் அளவிலே உள்ளது. இந்த பேட்டரியில், கதிரியக்க மூலமாக நிக்கல்-63 பயன்படுத்தப்படுகிறது.
இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், எந்த பராமரிப்பும் இன்றி 50 ஆண்டுகளுக்கு இயங்கும் என கூறப்படுகிறது.
செயல்படுவது எப்படி?
இந்த பீட்டாவோல்ட் BV100 பேட்டரியில் 2 பகுதிகள் உள்ளது. ஒரு பகுதி கதிரியக்கத்தை உமிழவும், மற்றொரு பகுதி செமிகண்டக்டர் ஆற்றலை உறிஞ்சவும் பயன்படுகிறது.
இதில் கதிரியக்கப் பகுதியானது காலப்போக்கில் சிதைவடைகிறது. அதுவரை செமிகண்டக்டருக்கான அதிவேக எலக்ட்ரான்களை வழங்குகிறது.
இந்த நிகழ்வின் போது, 2 எலக்ட்ரான் துளைகளை உருவாக்கி சிறிய மின் ஆற்றலை வெளியிடுகிறது. கதிரியக்கத்தில் தோன்றும் தீங்கு விளைவிக்கும் பீட்டா துகள்கள் கசிவதைத் தடுக்க, ஒரு மெல்லிய அலுமினியத் தாள் பயன்படுத்துகிறது.
எதில் பயன்படுத்தலாம்?
ஆனால் இந்த பேட்டரியின் ஆற்றல் வெளியீடு குறைவாக இருப்பதால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேமராக்களை சார்ஜ் செய்ய முடியாது. இதன் மூலம் ட்ரோன்களின் பறக்கும் நேரத்தை நீட்டிக்க முடியும்.
நூறாண்டுகளுக்கு மேல் அதிக ஆற்றல் தேவைப்படாத மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், விண்வெளியில் கிரகங்களைச் சுற்றிவரும் ரோவர்கள், கடலில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம்.
பீட்டாவோல்ட் நிறுவனம் ஏற்கெனவே இந்த பேட்டரியை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டது. இது சுற்றுசூழலுக்கு உகந்த வகையிலும் உள்ளது.
இதில் பயன்படுத்தப்படும் Nickel-63 தாமிரமாக சிதைவதால், பெரும்பாலான ரசாயன பேட்டரிகளை விட மறுசுழற்சி செய்வதற்கு மலிவானதாக உள்ளது.
இந்த அணுக்கரு பேட்டரி 3 வோல்ட்டில் 100 மைக்ரோவாட் மின் உற்பத்தியை வழங்குகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு வாட் திறன் உள்ள பேட்டரியை அறிமுகப்படுத்த உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |