கவலைப்பட்ட ஜெமிமா: நானே குடியேறிதான் என பதிலளித்த அவுஸ்திரேலிய வீராங்கனை
ஜெமிமா ரோட்ரிகஸ் அவுஸ்திரேலியா தன்னை அனுமதிக்குமா என்று கவலைப்பட்டதற்கு பெத் மூனி பதிலளித்துள்ளார்.
ஜெமிமா ரோட்ரிகஸ்
இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) உலகக்கிண்ணம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். 
குறிப்பாக, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 127 ஓட்டங்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனைக் குறிப்பிட்டு பேசிய ஜெமிமா, அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியதால் என்னை அவர்கள் நாட்டில் நுழைய அனுமதிப்பார்களா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை என்று கிண்டலாக கூறினார். இது உடனடியாக வைரலானது.
பெத் மூனி
இந்த நிலையில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையிலான WBBL போட்டியின்போது, பெத் மூனியிடம் ஸ்டம்ப் மைக் மூலம் வர்ணனையாளர்கள் பேசினர்.
அப்போது ஜெமிமாவின் கருத்து குறித்து அவர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பெத் மூனி (Beth Mooney),
"எங்களை தோற்கடித்ததால், நாட்டிற்குள் அனுமதிக்கப்போவதில்லை என்று கவலைப்படுவதாக ஜெமிமா கூறியதை முன்பு கேட்டோம்.
ஆனால், தோற்றதற்காக அவுஸ்திரேலியா எங்களை மீண்டும் உள்ளே அனுமதிக்கப்போவதில்லை என்று நான் உண்மையில் நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக, குடியேற்றம் என்னை உள்ளே அனுமதித்தது" என தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |