இந்தியாவுக்கு எதிராக 57 பந்துகளில் சதமடித்த வீராங்கனை! மகளிர் கிரிக்கெட்டில் இமாலய சாதனை
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 412 ஓட்டங்கள் குவித்தது.
எல்லிஸி 68 ஓட்டங்கள்
டெல்லியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை துவங்கியது. அலிஸ்ஸா ஹீலி 18 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பின்னர் ஜார்ஜியா வோல் 68 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து எல்லிஸி பெர்ரி (Ellyse Perry) 68 (72) ஓட்டங்கள் குவித்தார்.
பெத் மூனே ருத்ர தாண்டவம்
பின்னர் பெத் மூனே (Beth Mooney) ருத்ர தாண்டவமாடினார். தொடர்ச்சியாக பவுண்டரிகளை விரட்டிய மூனே 57 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன்மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
அவர் 75 பந்துகளில் 1 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் 138 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ரன்அவுட் ஆனார்.
அவுஸ்திரேலிய அணி அணி 47.5 ஓவரில் 412 ஓட்டங்கள் குவித்தது. அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளும், ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும், கிராந்தி மற்றும் ஸ்னேக் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |