சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? அதனால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா?
நாம் தினசரி செய்யும் சில செயல்கள் கூட ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அதில் முக்கியமான ஒன்று சாப்பிடும்போது டிவி பார்ப்பது, இந்த பழக்கம் பலரிடமும் உள்ளது.
சாப்பிடும்போது டிவி பார்ப்பதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து காண்போம்.
அதிகம் சாப்பிட தூண்டும்
மற்ற நேரத்தை ஒப்பிடும்போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது அதிகம் சாப்பிட தூண்டுவதுடன் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
குறிப்பாக இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் அதிகம் சாப்பிடுவதை தூண்டுகிறது.
கவன சிதறல்
மருத்துவத்தின் படி நீங்கள் சாப்பிடும்போது உங்கள் மூளை அதை கண்காணித்து அதன் சுவை மற்றும் அளவை பற்றிய சிக்னல்களை அனுப்பும். ஆனால் டிவி பார்த்துக்கொண்டு நீங்கள் சாப்பிடும்போது உங்கள் மூளை எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் குழம்பி கவன சிதறல் ஏற்படும், இதனால் மூளை தவறான சிக்னல்களை அனுப்பத்தொடங்கும்.
வளர்சிதை மாற்றம்
ஆய்வுகளின் படி தொலைக்காட்சி பார்ப்பது கலோரிகளை குறைக்க உதவாது, அதேசமயம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் செரிமான கோளாறு மற்றும் ஆற்றல் இழப்பு ஏற்படலாம்
உறவு பிரச்சினைகள்
நாள் முழுவதும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்யும்போது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் ஒரே நேரம் இரவு மட்டும்தான். அந்த நேரமும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு சாப்பிடுவது குடும்பத்தினருக்கு இடையேயான விவாதங்களை குறைக்கும்.
பேச்சுக்கள்தான் குடும்பத்தில் இருக்கும் பாசத்தையும், உறவையும் உயிர்ப்புடன் வைத்திற்கும். அது குறையும்போது உறவுகளில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
திருப்தியில்லாத உணர்வு
ஒருவேளை உங்களுக்கு இது சந்தோஷமான செய்தியாக இருக்கலாம், மருத்துவ அறிவியலின் படி ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும்போது ஒரு செயலில்தான் மூளை ஈடுபடும், அதனால் மற்றொரு செயல் முழுவதும் வீணாகத்தான் ஆகும். சாப்பிடும் நேரத்தில் டிவி பார்க்கும்போது மூளை டிவியில் தான் கவனம் செலுத்தும், இதனால் உணவில் இருந்து கிடைக்கும் சத்துகள் நமக்கு கிடைக்காது என்பதை மறவாதீர்கள்