நாளைய ஆட்டம்..நான் முன்பே கூறினேன்: இலங்கை வீரர்
சிட்னியில் நாளை நடக்கும் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது
நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் என்று முன்பே கூறியதாக பனுக ராஜபக்ச தெரிவித்துள்ளார்
அவுஸ்திரேலியாவில் எங்கள் இருப்பை நியாயப்படுத்த விரும்புகிறோம் என இலங்கை வீரர் பனுக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி நாளை சிட்னியில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் 5 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், இலங்கை அணி 4 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதனால் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வியுற்று, நாளைய போட்டியில் இலங்கை வெற்றி பெறும் பட்சத்தில் அரைஇறுதியில் நுழைய முடியும்.
இந்த நிலையில் இலங்கை வீரர் பனுக ராஜபக்ச நாளைய போட்டி குறித்து கூறுகையில், 'நாளைய ஆட்டம் முடிவடைவது மிகவும் முக்கியமானது என்று நான் விளையாட்டிற்கு முன்பே அதைப் பற்றி கூறினேன். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் மற்றும் அவுஸ்திரேலியாவில் எங்கள் இருப்பை நியாயப்படுத்த விரும்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.