Job: பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கான வேலைவாய்ப்பு
பாரதியார் பல்கலைக்கழகமானது Project Assistant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
Project Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,600/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், 07.06.2024ஆம் திகதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |