பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவை ஏற்ற முக்கிய தலைவர்!
பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23-ம் திகதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது.பின்னர், மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்
இன்றுடன் மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் ஆகின்றன. இதனால், அவருக்கு மருத்துவச் செலவு அதிகரித்து வருகின்றன.
இருப்பினும் அவருக்கு மருத்துவச் செலவுக்கு பணம் கொடுக்க அவரது குடும்பத்தில் யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனை தெரிந்து கொண்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தற்போது பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் பாரதிராஜா வீடு திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது.