''என் முகத்தில் காரி துப்புங்கள்'' பிரபல இயக்குனரிடம் கேட்ட நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் முகத்தில் இயக்குநர் காரி துப்பிய சம்பவம் குறித்து, ரேடியோ ஜாக்கி ஷா கடந்த 2 மாதத்திற்கு முன்னர் தன்னுடைய யூடியூப்பில் பேசியுள்ளார். அவர் கூறுகையில்..
ரஜினிகாந்தின் படப்பிடிப்பு
“16 வயதினிலே'' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக நடித்தார். அப்போதே அவர் பிரபலமான வில்லனாக மக்கள் மனதில் இடம் பிடித்திவிட்டார்.
அந்தப் படத்தில் நடிகை ஸ்ரீதேவி ரஜினிகாந்தை துப்புவது போன்ற ஒரு காட்சி இருந்தது. ஸ்ரீதேவி துப்புவது போன்ற காட்சியை படக்குழு எடுத்து விட்டது.
அடுத்தது ரஜினிகாந்த் முகத்தில் எச்சில் இருப்பது போன்ற காட்சியை எடுத்தாக வேண்டும். இயக்குனர் பாரதிராஜா சோப்பை கரைத்து, ரஜினியின் முகத்தில் வீசுகிறார்.
அந்த காட்சியை எடுத்து விட்டார்கள். ஆனால் பாரதிராஜாவின் மனதில், அந்த சோப்பு நுரையானது அவர் எதிர்பார்த்த போல் உண்மையான காட்சியாக இல்லாதது அவருக்கு திருப்தியளிக்கவில்லை.
துப்ப சொல்லிய ரஜினிகாந்த்
அதனை புரிந்து கொண்ட ரஜினிகாந்த் உடனே அவரிடம் சென்று என்ன ஆச்சு என்று கேட்கிறார். இதனையடுத்து பாரதிராஜா தனக்கு அந்த காட்சியில் திருப்தி இல்லை என்று கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் உடனே ''தலைவரே நீங்கள் என் மீது துப்புங்கள்'' என்று சொல்லி இருக்கிறார்.
அதை சொன்னபோது, பாரதிராஜா அப்படியே உறைந்து போய்விட்டாராம். அதன் பின்னர் அந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |