16 வருடங்களாக தமிழில் நடிக்காதது ஏன்? மனம் திறந்த பாவனா
16 வருடங்களுக்கு பிறகு, தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார் பாவனா.
பாவனா
கேரளாவை சேர்ந்தவரான பாவனா, மலையாளம், தமிழ் மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாவனா, வெயில், தீபாவளி, ஆர்யா, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளியான அசல் படத்திற்கு பின்னர் பாவனா தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
அதே நேரத்தில், மற்ற மொழிப்படங்களில் நடித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு, படத்தயாரிப்பளார் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மீண்டும் தமிழில் நடிக்கும் பாவனா
திருமணத்திற்கு பிறகும் கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த பாவனா, 16 வருடங்களுக்கு பிறகு தமிழில் 'தி டோர்' (the door) என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இது குறித்து பாவனா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், இப்போதும் ரசிகர்கள் தீபாவளி படத்தில் நடித்த சுசி கதாபாத்திரத்தை நியாபகம் வைத்து சமூகவலைத்தளங்களில் அந்த பெயரில் அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அசல் படம் தமிழில் என்னோட கடைசி படமா இருக்கும்னு நினைக்கவில்லை. தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால் என்னை எப்படி தொடர்பு கொள்வது என இயக்குநர்களுக்கு தெரியாமல் அந்த வாய்ப்புகளை இழந்துள்ளேன்.
நிறைய பேர் இந்த படத்திற்கு உங்களை தான் யோசிச்சேன் என சொல்வாங்க. சில படங்களின் கதை பொருத்தமாக இல்லாததால் நடிக்கவில்லை" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |