இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர்குமார் தந்தை திடீர் மரணம்! என்ன காரணம்? வெளியான தகவல்
இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான புவனேஷ்வர்குமாரின் தந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய அணி வீரரும், ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணிக்காக விளையாடி வருபவருமான புவனேஷ்குமாரின் தந்தை கிரன் பால் சிங், நுரையீரல் புற்று நோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.
கடந்த 14 நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் உத்திரப்பிரதேசத்தின் Meerut-ல் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த செவ்வாய் கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று சற்று முன் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய வீரருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.