ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த புவனேஷ்வர்குமார்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல்லில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பையில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 151 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர்குமார் 4 ஓவர்களில் 22 ஓட்டங்கள் மட்டுமே வீட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை powerplay-யில் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் புவனேஷ்வர்குமார் படைத்துள்ளார். சந்தீப் சர்மா powerplay-யில் 53 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்த நிலையில், 54 விக்கெட்டுகளை கைப்பற்றி அவரது சாதனையை புவனேஷ்வர்குமார் முறியடித்துள்ளார்.