நீங்க எல்லாம் ஆளே கிடையாது! இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமாரின் மனைவி காட்டம்
கணவர் புவனேஸ்வர் குமார் குறித்த கடும் விமர்சனங்களுக்கு அவர் மனைவி தந்த பதிலடி.
உங்களையெல்லாம் ஒரு ஆளாக நினைப்பதும் கிடையாது என பதிவு.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் புவனேஸ்வர் குமார் மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில் அதற்கு அவர் மனைவி பதிலடி கொடுத்திருக்கிறார்.
அனுபவ வீரராக திகழும் புவனேஸ்வர் குமார் கடந்த சில போட்டிகளில் முக்கியமான கட்டத்தில் ரன்களை வாரி வழங்கினார். ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி கட்ட ஓவர்களே காரணம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி கட்டத்தில் 18 பந்துகளை புவனேஸ்வர் குமார் வீசி 49 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாகவே மூன்று போட்டியிலும் இந்தியா தோற்றதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Instagram
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட புவனேஸ்வர் குமாரின் மனைவி நுபுர் நகார், தற்போது எல்லாம் மக்கள் மதிப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் கிடையாது. இதனால் வன்மத்தையும் கோபத்தையும் பரப்புவதற்கு அவர்களுக்கு அதிக நேரம் இருக்கிறது.
உங்களுடைய கருத்துக்களையும் வார்த்தைகளையும் இங்கு யாரும் கவனிக்க போவது கூட கிடையாது. உங்களை ஒரு ஆளாக நினைப்பதும் கிடையாது. எனவே உங்களை உயர்த்திக்கொள்ள நேரத்தை ஒதுக்குங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Instagram