நான் வெறும் பேப்பருக்கு தான் துணை கேப்டன்... பிரபல வீரர் பற்ற வைத்த நெருப்பு
இலங்கை சென்றிருக்கும் இந்திய இளம் வீரர்கள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள புவனேஷ் குமாரின் கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.
முதல் நாளில் இருந்து சிக்கல்கள், சர்ச்சைகள், கருத்து பரிமாற்றங்கள் என சலசலப்புகள் எழுந்தாலும், டிராவிட் எனும் ஒற்றை ஆளுமை உடன் இருப்பதால், எல்லாமே எழுந்த வேகத்தில் காணாமல் போய்விடுகிறது.
இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்து புவனேஷ் குமார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில், வெறும் பேப்பருக்கு தான் நான் துணை கேப்டன். இதனால், பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடப் போவதாக நான் நினைக்கவில்லை. ஒரு மூத்த வீரராக இருப்பதால் எனது பங்கு மற்ற வீரர்களின் திறன்களையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் விஷயங்களைச் செய்வதாகும்.
இந்திய அணியின் துணை கேப்டனாக இருப்பது ஒரு மரியாதை மற்றும் பொறுப்பு. அவ்வளவே. எனவே, நான் செய்துகொண்டிருந்த காரியங்களைத் தொடர்ந்து செய்ய முயற்சிப்பேன், இந்த சுற்றுப்பயணத்தில் எங்கள் அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன் என சொல்லியிருக்கிறார்.
இந்த விவகாரம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.