ரூ 8,000 முதலீட்டில் தொடங்கிய விற்பனை... இன்று ரூ 700 கோடி சாம்ராஜியம்: 40 வயதில் சாதித்த பெண்
டெல்லியை சேர்ந்த Meena Bindra தமது வீட்டில் இருந்தே ரூ 8,000 முதலீட்டில் தொடங்கிய பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் விற்பனை, தற்போது ரூ 700 கோடி மதிப்பிலான சாம்ராஜியமாக உயர்ந்துள்ளது.
40 வயதில் தொழில் தொடங்க முடிவு
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த Meena Bindra தமது 20 வயதிலேயே திருமணமும் செய்து கொண்டார். ஆனால் 40 வயதில் தொழில் தொடங்க முடிவு செய்தவர், பெண்களுக்கான ஆயத்த ஆடைகளை தமது வீட்டில் இருந்தே விற்பனை செய்ய தொடங்கினார்.
Biba Apparels என தற்போது மிகப்பிரபலமடைந்திருக்கும் இவரது நிறுவனம் தொடங்கும் போது முதலீடுக்கு என அவரிடம் தொகை ஏதும் இருக்கவில்லை. சொந்தமாக வங்கிக் கணக்கும் அவருக்கு இல்லை.
ஆனால் கணவர் உதவ முன்வந்ததுடன், வங்கியில் இருந்து ரூ 8000 கடனாகப் பெற்றுக்கொடுத்துள்ளார். 1988ல் வெறும் ரூ 8000 முதலீட்டில் தொடங்கப்பட்டது தான் Biba. ஆனால் 2004ல் தான் மும்பை வணிக வளாகத்தில் தங்களது முதல் கடையை திறந்துள்ளனர்.
76 நகரங்களில் 180 கடைகள்
தொடர்ந்து அசுர வளர்ச்சி கண்ட Biba, 2012ல் ஆண்டு வருவாய் என்பது ரூ 300 கோடியை எட்டியதாகவே கூறப்படுகிறது. அதன் பின்னர் புலிப்பாய்ச்சலை முன்னெடுத்துள்ள Biba 2020ல் ரூ 700 கோடி வணிகம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியா முழுக்க 76 நகரங்களில் 180 கடைகளை கொண்டுள்ளது. மட்டுமின்றி, இந்தி திரையுலகில் கால்பதித்துள்ள Biba நிறுவனம், பல திரைப்படங்களுக்கான உடைகளையும் தயாரித்து வழங்கியுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் கோடீஸ்வர பெண்களின் வரிசையில் Meena Bindra-வும் இடம்பெற்றுள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 710 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |