குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத்தின் கடைசி ஆசை இது தான்! நெருங்கிய நண்பர் உருக்கம்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் கடைசி ஆசை குறித்து அவரது நெருங்கிய நண்பர் சில உருக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாய்னா கிராமம் தான் பிபின் ராவத் பிறந்த ஊராகும். இவருக்கும் அவரது மனைவி மதுலிகாவுக்கும் 1985ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விபின் ராவத்தின் குடும்பத்தில் ஒருவரான பாரத் சிங் ராவத் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
முப்படைகளின் தளபதி விபின் ராவத் தன்னுடைய பிறந்த ஊரில் சொந்தமாக ஒரு வீடு கட்ட ஆசைப்பட்டார். இது பல காரணங்களால் பல முறை தள்ளிப்போனது.
ஆனால் கடந்த வாரம் அவரும் அவருடைய மனைவி மதுலிகா முன்னிலையில் வீடு கட்டுவதற்கான பூமிபூஜை சிறப்பாக நடைபெற்றது. அதற்குள் அவர் இறந்த செய்தி தெரியவந்தவுடன் வீடு கட்டும் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்துக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த சாலை அமைக்குமாறு அரசிடம் கோரிக்கையும் வைத்திருந்தார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இவருடைய மரணம் உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.