பிரித்தானியாவில் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: 11 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்
பிரித்தானியாவின் போல்டன் பகுதியில் 11 வயது சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்து இருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 வயது சிறுவன்
உயிரிழப்பு டிசம்பர் 30ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 1:40 மணியளவில் போல்டனில் உள்ள வெர்னான் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 11 வயது சிறுவன் மீது பஸ் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
Manchester Evening News
இதையடுத்து போல்டன் பகுதிக்கு விரைந்த கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் சிறுவனை மீட்டு மருத்துவ சிகிச்சை அனுப்பி வைக்க முயற்சித்தனர், ஆனால் விபத்திற்குள்ளான சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வளைவுக்குள் இருந்து பைக்கை கண்டுப்பிடித்தனர்.
பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், பேருந்து ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Manchester Evening News
அத்துடன் விசாரணை அதிகாரிகள் தற்போது பொதுமக்களிடம்- அதிலும் குறிப்பாக அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் இருந்தால் தயவு செய்து 0161 856 4741 அல்லது 0161 856 8802 என்ற எண்ணை மேற்கோள் காட்டி தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Manchester Evening News