இறுதியில்... ஹரியிடம் சரணடையும் பிரித்தானிய ராஜகுடும்பம்: முதல் சந்திப்பு விரைவில்
எதிர்வரும் மாதங்களில் ஹரி மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், மன்னர் சார்ல்ஸ் ஆகியோரின் நல்லிணக்க கூட்டம் ஒன்று முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக ராஜ குடும்பத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
நல்லிணக்க கூட்டம்
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு முன்னர் கருத்து வேறுபாடுகளை மொத்தமாக நீக்க அரண்மனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நல்லிணக்க கூட்டம் ஒன்றை மூனெடுக்க வேண்டும் என இளவரசர் ஹரி தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்துள்ளார். மட்டுமின்றி, தமக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு ராஜ குடும்பம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
@getty
ஆனால், ராஜ குடும்பத்து உறுப்பினர் எவரும் நல்லிணக்க கூட்டம் தொடர்பிலான யோசனையை கண்டுகொள்ளவே இல்லை. ராஜ குடும்பத்திற்கு மேலதிக பாதிப்பு உருவாக வேண்டாம் என கருதுவதாகவும், இதனால் விட்டுகொடுத்து செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹரி தமக்கு விசுவாசமான ராஜகுடும்ப உறுப்பினர்களுடன், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் சார்லஸ் மன்னருடன் நல்லிணக்க கூட்டத்தில் கலந்துகொள்ளட்டும் எனவும், அதில் மனம்விட்டு பேச வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதில் முக்கியமாக ஹரிக்கு ஆதரவாக செயல்படும், அவரது முன்னாள் தனிப்பட்ட செய்லரான Ed Lane Fox மற்றும் மறைந்த ராணியாரின் தனிப்பட்ட செயலரான Lord Geidt ஆகியோர் கலந்துகொள்ள வாய்ப்பு என கூறுகின்றனர்.
ஹரியிடம் சரணடைந்த ராஜ குடும்பம்
ஹரி அனுபவித்ததாக கூறப்படும் துயரத்தின் ஆழம் தாங்கள் புரிந்துகொள்வதாகவும், அனைத்து முடிவுகளும் எப்போதும் அதன் பலனைத் தருவதில்லை எனவும் மன்னர் மூலமாக தெரிவிக்க உள்ளனர்.
@getty
இதுவே, பிரித்தானிய ராஜ குடும்பம் ஹரியிடம் சரணடைந்ததாகவே கருதப்படும் எனவும், ஆனால் விட்டுக்கொடுத்து செல்ல மன்னர் முடிவு செய்துள்ளதை எதிர்ப்பது முறையல்ல என கூறுகின்றனர்.
ஹரி வெளியிட்டுள்ள நினைவுக் குறிப்புகள் நூல், விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. ஆனால் மன்னர் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் எதுவும் நடக்கவில்லை என்பது போல் முகபாவனை செய்கின்றனர்.
ஆனால், ராஜகுடும்பம் தவறினை ஒப்புக்கொள்ள தயாரான நிலையில், ஹரியும் இதுவரை ராஜ குடும்பத்திற்கு ஏற்படுத்திய சேதத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.