கேள்வி கேட்ட செய்தியாளரை அசிங்கமாக திட்டிய அமெரிக்க ஜனாதிபதி
தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை மிகவும் அசிங்கமான வார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளரை ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்தார், அப்போது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
“இது மிகப்பெரிய சொத்து. மேலும் பணவீக்கம்?” என்று கூறியபடியே அசிங்கமான வார்த்தையில் திட்டினார் ஜோ பைடன்.
அவரது இருக்கைக்கு அருகே இருந்த மைக்-கும் செயல்பாட்டில் இருந்ததால், அவர் திட்டிய வார்த்தைகள் அனைவருக்கும் கேட்டது.
மேலும் அங்கிருந்த கமெராக்களிலும் பதிவாகி இருந்ததால் பெரும் சரச்சை எழுந்துள்ளது.