ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடன்... வெளிவரும் புதிய பின்னணி
மருத்துவத்தை நாடும் நிலை தீவிரமாக ஏற்படும் என்றால் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக தாம் முடிவெடுப்பேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ட்ரம்புடனான நேரலை விவாதம்
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான நேரலை விவாதம் ஒன்று, ஜோ பைடனுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்த, அதன் பின்னர் அவரது சகாக்கள் உட்பட பலர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் தாம் டொனால்டு ட்ரம்பை தோற்கடிக்க தயாராக இருப்பதாக ஜோ பைடன் அறிவித்திருந்தாலும், அவரது சமீபத்திய செயற்பாடுகள் அவரது கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் ஜோ பைடனுக்கு எதிரான கருத்தை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் New York Times வெளியிட்டுள்ள செய்தியில்,
மருத்துவர்களை நாடும் இக்கட்டான நிலை ஏற்படும் என்றால் மட்டுமே தாம் போட்டியில் இருந்து விலகும் முடிவுக்கு வர இருப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவுள் வந்து சொன்னால்
அதாவது, ஜனாதிபதிப் போட்டியில் நீடிப்பதை மறுபரிசீலனை செய்ய ஏதேனும் காரணம் உள்ளதா என்று பைடனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், தமது உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டால்,
மருத்துவர்கள் வந்து, உங்களுக்கு அந்தப் பிரச்சனை இருக்கிறது, இந்தப் பிரச்சனை இருக்கிறது என உண்மையான நிலையை விளக்கினால், போட்டியில் இருந்து விலகுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார்.
ஆனால் இந்த மாத தொடக்கத்தில் நேர்முகம் ஒன்றில் பேசிய ஜோ பைடன், கடவுள் வந்து சொன்னால் மட்டுமே தாம் ஜனாதிபதிப் போட்டியில் இருந்து விலக முடிவு செய்வேன் என்றார்.
டொனால்டு ட்ரம்புக்கு எதிரான நேரலை விவாதத்தின் மோசமான பங்களிப்புக்கு பிறகு ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், அவரது வயது மற்றும் உளவியல் திறன் பற்றிய கவலைகள் காரணமாக அவர் மீண்டும் தேர்தலில் களமிறங்குவதைக் கைவிட வேண்டும் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |