தகுந்த பதிலடி கொடுப்போம்... ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து தனது முதல் உத்தியோகப்பூர்வ பயணத்தை தொடங்கினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் உத்யோகபூர்வ பயணமாக புதன்கிழமை பிரித்தானியா வந்தடைந்தார்.
8 நாள் ஐரோப்பாவில் பயணம் மேற்கொள்ளும் பைடன், ஜூன் 11 முதல் 13ம் திகதி வரை Cornwall-ல் நடக்கும் ஜி-7 மாநட்டில் பங்கேற்கிறார்.
பின் விண்ட்சர் கோட்டையில் பிரித்தானியா மகாராணியை சந்திக்க உள்ளார்.பயணத்தின் முடிவில் பைடன் ஜெனீவாவில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க உள்ளார்.
புதன்கிழமை Cornwall புறப்படுவதற்கு முன் பிரித்தானியாவின் Suffolk-ல் உள்ள RAF Mildenhall விமானப்படை தளத்தில் அமெரிக்க படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பைடன் உரையாற்றினார்.
அப்போது, நாங்கள் ரஷ்யாவுடன் ஒரு மோதலை விரும்பவில்லை. நிலையான உறவை விரும்புகிறோம்.
ஆனால், ரஷ்ய அரசாங்கம் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதை தெளிப்படுத்த விரும்புகிறேன் என பைடன் எச்சரித்தார்.