உக்ரைனில் இனப்படுகொலை! முதன்முறையாக கூறிய ஜோ பைடன்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இனப்படுகொலைக்கு சமம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக கூறியுள்ளார்.
உக்ரைன் மீது 49வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா, தனது நடவடிக்கையை தொடரப்போவதாகவும் மற்றும் அதன் இலக்குகளை அடையப்போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இனப்படுகொலை என கூறினார்.
உக்ரேனியர்களை அழித்தொழிக்க புடின் முயற்சிக்கிறார் என்பது மிக நிதர்சனமாக தெரிகிறது.
ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால் ஜேர்மனி எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும்? போட்டுடைத்த தலைவர்
இது இனப்படுகொலையா இல்லையா என்பதை சர்வதேச அளவில் வழக்கறிஞர்கள் முடிவு செய்யட்டும், ஆனால் அது நிச்சயமாக என்னை பொறுத்தவரை இனப்படுகொலையாக தான் தோன்றுகிறது.
உக்ரைனில் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கான ஆதாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என பைடன் தெரிவித்துள்ளார்.