அடிக்கடி பசி ஏற்பட்டு அதிகம் சாப்பிடுவதால் கூடும் எடை! அதை தடுக்கும் எளிய உணவுகள்
சிலருக்கு அதிகளவில் அடிக்கடி பசிக்கும். அந்த சமயத்தில் சகட்டுமேனிக்கு கண்ட உணவுகளை சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிடுவதால் உடல் பருமன், தொப்பை ஏற்பட்டு அது வேறு சில உடல் உபாதைகளை கொண்டு வந்துவிடும்.
பசியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட உணவுகள் உதவும். இந்த உணவுகள் வயிற்றில் ஹார்மோன்களை வெளியிடச் செய்து, வயிற்றை நிரப்பி, அடிக்கடி ஏற்படும் பசியுணர்வைக் கட்டுப்படுத்தும்.
ஆப்பிள்
ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு 3 ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், பசி கட்டுப்பட்டு, உடல் எடை நாம் நினைப்பதை விட அதிகமாக குறையும்.
பீன்ஸ்
பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் மிகவும் குறைவு என்பதால், இரத்த சர்க்கரை சீரான அளவில் பராமரிக்கப்படும்.
முட்டைகள்
முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும். ஆகவே தான் காலை உணவின் போது முட்டையை சேர்த்துக் கொண்டால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடிகிறது.
காளான்
காளான்களில் கலோரிகள் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான செலினியம் மற்றும் நியாசின் அதிகம் உள்ளதால், இது உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, நீண்ட நேரம் பசியெடுக்காமல் செய்யும்.
பீட்ரூட்
பீட்ரூட் கலோரி குறைவான ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், பசி கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளும் சரியாக இருக்கும்.