ஆப்பிள் நிறுவனத்திற்கு பேரிடி... முக்கிய தலை ஒருவரை தட்டித்தூக்கிய மெட்டா
செயற்கை நுண்ணறிவுத் துறையில் சிறந்த திறமையாளர்களை பணியமர்த்த மார்க் ஜுக்கர்பெர்க் தீவிரமாக களமிறங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு கெட்ட செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின்
ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த AI நிபுணர் ரூமிங் பாங்கிற்கு, மெட்டாவின் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' குழுவில் சேர ஒரு பெரிய தொகையை சம்பளமாக முன்மொழிந்துள்ளார் மார்க் ஜுக்கர்பெர்க்.
ஆண்டுக்கு 200 மில்லியன் டொலர் சம்பளத்தில் ரூமிங் பாங் மெட்டாவின் 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' குழுவில் சேர ஒப்புக்கொண்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கைத் தவிர அந்த நிறுவனத்தில் எவரும் இப்படியான ஒரு பெருந்தொகையை சம்பாதித்ததில்லை.
புதிய அடிப்படை மாதிரிகளை உருவாக்கும் ஆப்பிள் குழுவில் பாங் ஒரு முக்கிய பகுதியாக இருந்தார். ஆப்பிள் நிறுவனம் அப்படியான ஒரு பெருந்தொகையை வழங்க முயற்சிக்காததால், பாங் ஆப்பிளிலிருந்து வெளியேறி மெட்டாவில் சேர்ந்தார்.
பொதுவாக தலைமை நிர்வாக அதிகாரிகள் போன்றவர்களுக்கே ஆப்பிள் நிறுவனம் அப்படியான ஒரு தொகையை சம்பளமாக முன்வைக்கும். மெட்டா நிறுவனம் சிறந்த தொழில்நுட்ப நிபுணர்களை பணியமர்த்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
முன்னாள் GitHub தலைமை நிர்வாக அதிகாரியான Nat Friedman, Daniel Gross மற்றும் Alexandr Wang போன்ற சிறந்த நிபுணர்களை பணியமர்த்தியுள்ளது. OpenAI ஊழியர்களுக்கும் பெருந்தொகை சம்பளத்தை மெட்டா முன்மொழிந்துள்ளது.
இலக்குகளை அடைய வேண்டும்
இதுவரை அங்கிருந்து 10 ஊழியர்களை மெட்டா பணியமர்த்தியுள்ளது. ஆனால் மெட்டா இந்த பெரிய தலைகள் அனைவருக்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது, அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக பெருந்தொகையும் மகத்தான ஊக்கத்தொகையும் வழங்கப்படும்,
ஆனால் அவர்கள் நிறுவனத்துடன் விசுவாசமாக இருந்து குறிப்பிட்ட இலக்குகளை அடைய வேண்டும். மேலும், சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும் செயல்திறன் இலக்குகளைப் பொறுத்தது.
வெளியான தகவலின் அடிப்படையில், மெட்டாவின் 'சூப்பர் இன்டலிஜென்ஸ் குழு' உறுப்பினர்களுக்கு பெருந்தொகை அடிப்படை சம்பளம், மெட்டாவில் இணைவதாலையே ஊக்கத்தொகை மற்றும் மெட்டா பங்குகள் அடங்கிய முழுமையான பலன் கிடைக்கும், இதில் மிக முக்கியமான அம்சமாக மெட்டா பங்குகள் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |