முகேஷ் அம்பானிக்கு கடும் பின்னடைவு: டாப் 10 வரிசையில் இருந்து வெளியேற்றம்
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதுடன், டாப் 10 வரிசையில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
17வது இடத்தில்
உலகின் டாப் 10 பில்லியனர்கள் வரிசையில் இந்த இருவரும் இல்லை என்றாலும், உலகளவில் டாப் 30 வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளனர்.

ஜனவரி 9 ஆம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில், முகேஷ் அம்பானி 106 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன், உலகில் 17வது இடத்தில் உள்ளார்.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் முகேஷ் அம்பானி 2.5 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே, அவர் டாப் 10 வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) பங்கு விலைகள் கூட சரிவுப் பாதையைக் கண்டன, BSE-யில் ஒவ்வொன்றும் ரூ 1,470 எனக் குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டன.
தனிப்பட்ட முறையில் முகேஷ் அம்பானி RIL-ல் 0.12 சதவீத பங்குகளை கொண்டுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 19.89 லட்சம் கோடி என சரிவடைந்துள்ளது.

கெளதம் அதானியும்
ரஷ்ய கச்சா எண்ணெய் நிரப்பப்பட்ட மூன்று கப்பல்கள் ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கிச் செல்வதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் பங்குகள் அன்றைய தினம் 5% வரை பெரிய சரிவைக் கண்டன.
ஆனால், ரஷ்யா எண்ணெய் விவகாரம் அடிப்படை ஆதாரமற்ற இட்டுக்கட்டிய கதை என்றே முகேஷ் அம்பானி தரப்பு வாதிட்டுள்ளது.

இன்னொரு பக்கம் அதானி குழுமத்தின் கெளதம் அதானியும் ஒரே நாளில் ரூ 2,427 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளார். உலகின் டாப் 100 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 28வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டுள்ளார்.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தற்போது விலை சரிவைக் கண்டுள்ளது, தற்போது அதன் இரண்டாவது ஆதரவு நிலைக்கு (S2) கீழே வர்த்தகம் செய்யப்படுகிறது. தற்போதைய விலை ரூ.2160.70 ஆகவும், S2 ரூ 2302.53 ஆகவும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |