அம்மாவாக போகும் பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகையும், பிக்பாஸ் மூலம் பிரபலமானவருமான மதுமிதா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரது சீமந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளன.
திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த மதுமிதா, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்ததன் மூலம் ஜாங்கிரி மதுமிதா என்று அழைக்கப்பட்டார்.
அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் பிக்பாஸ் வீட்டில் பலரால் மன உளைச்சலுக்கு ஆளானதால் அவ்வாறு செய்ததாக ஊடகங்களிடம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்ட பின்னர் பொது வெளியில் அதிகம் அவர் வெளி வரவில்லை.

இந்த நிலையில், மதுமிதா கர்ப்பமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அவருக்கு சீமந்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து தனது முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இவரது சீமந்தம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        