சாப்பிட சாப்பாடு இல்ல! வாடகை கொடுக்க முடியல.. பிக் பாஸ் வீட்டில் இசைவாணி உருக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் கடந்து வந்த பாதை குறித்து இசை வாணி கலக்கத்துடன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் 5ஆம் சீசன் தொடங்கியது. இந்த சீசனையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த முறை நிகழ்ச்சியில் 18 பேர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சென்று இரண்டாம் நாளான இன்று கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் கூறுகின்றனர். அதில் மற்ற போட்டியாளர்கள் அமர்ந்திருக்க பாடகி இசைவாணி தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை பற்றி விவரிக்கிறார்.
அதில் அப்பா ஹார்பர்ல வேலை செஞ்சாரு.. அப்போது சாப்பாட்டுக்கு அவ்ளோ கஷ்டம். எங்க வீட்டில ஒரு நேரம் தான் சாப்பாடு இருக்கும். இதனால் கஷ்டப்படுற எல்லாருக்கும் ஒரு நாள் வாழ்க்கை நிச்சயமாக மாறும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.