பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு பெரும் ஊதிய உயர்வு... கொந்தளிக்கும் மக்கள்
மக்கள் விலைவாசியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு பெரும் ஊதிய உயர்வு அளிக்கப்பட இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி எரிச்சலை உருவாக்கியுள்ளது.
மருத்துவமனை ஊழியர்களுக்கு 5 சதவிகிதம், அரசியல்வாதிகளுக்கு 7.1 சதவிகிதம்
கோவிட் காலகட்டத்தில், மருத்துவமனை ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து, வீட்டுக்குக் கூடசெல்லாமல், குடும்பத்தைப் பிரிந்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். அரசியல்வாதிகள் பார்ட்டி வைத்து என் ஜாய் செய்துகொண்டிருந்தார்கள்.
மருத்துவமனை ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக தெருவுக்கு வந்து போராட வேண்டியிருந்தது. அப்படியும் அவர்களுக்கு 5 சதவிகித ஊதிய உயர்வுதான் கொடுக்கப்பட்டது.
ஆனால், அரசியல்வாதிகளுக்கோ அடுத்த ஆண்டில் 7.1 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Credit: PA
லட்சாதிபதிகளாகும் அரசியல்வாதிகள்
ஊதிய உயர்வைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, பிரித்தானிய அரசியல்வாதிகள் சுமார் ஒரு லட்சம் பவுண்டுகள் ஊதியம் பெற இருக்கிறார்கள். அதாவது, 92,731பவுண்டுகள் ஊதியம்.
அதுபோக, அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் வரிப்பிடித்தம் எதுவும் இல்லாத தினசரி பேட்டா (allowance), 342 பவுண்டுகளிலிருந்து 366 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
அடுத்த ஏப்ரல் வாக்கில் பண வீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அரசியல்வாதிகளின் ஊதியம், விலைவாசி உயர்வைவிட மிக அதிகமாக இருக்கும்.
மக்களில் பலர் பிள்ளைகளுக்கு பால் பவுடர் வாங்கத் திணறிய காலகட்டத்தை மறக்கமுடியாது. ஆக, பொதுமக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அரசியல்வாதிகளுக்கு இவ்வளவு பெரிய ஊதிய உயர்வு அளிக்கப்பட இருப்பதால் மக்கள் கொந்தளித்துப்போயிருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |