டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்! இலங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்பு
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளார்.
நவம்பர் 6ம் திகதி ஷார்ஜாவில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜேசன் ராய், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆடுகளத்திலே சரிந்து வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கலங்கினார்.
இதன் பின் அவர் கைத்தாங்களாக ஆடுகளத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டார்.
பின் போட்டி முடிந்ததும் ஊன்றுகோல் உதவியுடன் களத்திற்குள் வந்த ஜேசன் ராய், போட்டியில் வென்ற தென் ஆப்பரிக்கா அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, ஜேசன் ராய்-க்கு ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டும், அதன் முடிவை பொறுத்தே அவர் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் தொடரில் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என இங்கிலாந்து அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜேசன் ராய் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜேசன் ராய்-க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 10ம் திகதி அபுதாபியில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.
நவம்பர் 11ம் திகதி துபாயில் நடக்கவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா மோதுகின்றன.