நீங்கள் மட்டும் செய்தது என்னவாம்? பீர் பாட்டிலுடன் பிக்பாஸ் பாலாஜி- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க என்று பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகன்தாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலாஜி முருகதாஸ்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்கள் பாலாஜி முருகதாஸ். இவர் அந்த சீசனில் ஆரியுடன் கடுமையான மோதல் போக்கை கொண்டிருந்தார்.
அந்த சீசனில் இவர் ரன்னர் அப் பட்டத்தை வென்றார். இதன் பிறகு, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார் பாலாஜி முருகதாஸ்.
இதன் பிறகு, சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிப்பில் பாலாஜி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அப்படம் தொடங்கப்படவே இல்லை.
என்னை அரசியலுக்கு இழுக்காதீங்க
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது.ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள்தான் அதிகம் என்று பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸை கடுமையான விமர்சித்து வந்தனர்.
இதன் பிறகு மீண்டும் ஒரு டுவிட்டை வெளியிட்டார். அந்த டுவிட்டில், குடியால் என்னை போன்றவர்களில் சிலர் அனாதையாகி உள்ளனர். ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தான் டாஸ்மார் கடைகளை மூடச் சொல்கிறேன். மேலும் என்னை தயவு செய்து அரசியலுக்கு இழுக்காதீர்கள். அவ்வாறு இழுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஒரு நீச்சல் குளத்தில் குளிக்கும் பாலாஜி, பீரை எடுத்து தன் தலையில் ஊற்றுகிறார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு நெட்டிசன்கள் என்ன பிரதர்... இதெல்லாம் என்ன... அதாவது குடி குடியை கெடுக்கும் என்று கூறிவிட்டு இவரே பீரில் குளிப்பது என்ன நியாயம்... என்று விளாசி வருகின்றனர்.
Dear TN CM @mkstalin please Close tasmac ??
— Balaji Murugadoss (@OfficialBalaji) March 25, 2023
It kills and ruin more people and family when compared to online rummy.