என்னை ஏமாத்திட்டான்! காதலன் மீது பிக்பாஸ் ஜூலி பரபரப்பு புகார்
திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக காதலன் மீது நடிகை ஜூலி புகார் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஜூலி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி தம்மை மனிஷ் 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் பல்சர் பைக், தங்க நகைகளை வாங்கி கொண்டு மோசடி செய்துவிட்டதாக ஜூலி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
காதலருக்காக தாம் ரூ.2.3 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் ஜூலி தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.