"என் தவறுக்கு நான் வருத்தப்பட மாட்டேன்" - பிக் பாஸ் ஜோவிகா கைப்பட எழுதிய கடிதம்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜோவிகா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் ஜோவிகா
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிககழ்ச்சியன் 7வது சீசன் வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருகிறது.
இந்த சீசனில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
பலர் வெளியேற்றப்பட்டு சிலர் உள்ளே அனுபப்பட்டு என சுவாரஸ்யமாக நிகழ்சியானது சென்றுக் கொண்டு இருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் வனிதாவின் மகளான ஜோவிகா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். அதையடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அவரது கருத்தை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் பற்றிய ஜோவிகாவின் கருத்து
'என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். இது என் அம்மாவிடம் செல்வதற்கான நேரம். அவரே என்னுடைய உலகம், அவரை கவனித்துக் கொள்வதும், பாதுகாப்பதும் எனது கடமை மற்றும் பொறுப்பாகும்.
கடந்த வாரம் நான் உறுதியாக உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், நான் விரைவில் வீட்டிற்கு வர வேண்டும் என்பது தான். அங்கிருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டேன்.
எனது அன்பான போட்டியாளர்களுக்கும் சிறந்த வீரர் ஒருவர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைத்து எனது உரிமைக்காக மட்டுமே. அதில் நான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக ஒரு நாளும் வருத்தப்பட மாட்டேன். எனது செயல்களால் உங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பேன் என்று நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கடிதமானது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |